பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

161

அயல் மதத்தார், குறிப்பாகக் கிருஸ்துவ மதத்தார், ஆண்டுதோறும் ஓரிடத்தில் ஒரு பேரவை கூட்டிப் பல வகையில் மதச் சீர்திருத்தத்திற்கும், ஆக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் வழியமைப்பதுபோல, நம் சைவ சமயத்திலும் கூட்டப் பெறல் வேண்டுமென்பதனை அந்நாளிலேயே நம் அடிகளார் வற்புறுத்தினர். அங்ஙனம் ஓர் சபையைத் தாமே நடத்திக் காட்டியமை. 1929-ல் மே திங்களில் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. ஆயின் பல மடாதிபதிகளும் ஒருங்கு கூட வேண்டுமென்பதும் அடிகளாரின் எண்ணம். அது இன்றைய தெய்வீகப் பேரவையாக மிளிர்கின்றது.

தாமே பலமடங்களுக்குச் சென்று மடாதிபதிகளைச் சந்தித்து ஆக்க வேலைகளுக்கு வழி காணுமாறு தூண்டியதுண்டு.

1916-ஆம் ஆண்டில் சுவாமிகள் மயிலத்திற்கு எழுந்தருளி, ஆங்கு மூன்று நாள் தங்கியிருந்து சொற்பொழிவுகள் ஆற்றியும் சமயப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டும் மீண்டதுண்டு.

அதே ஆண்டில் திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மஹரிஷிகளை, விருப்பாட்சி குகையிற் சந்தித்து அளவளாவினார்கள்.

1925-ல் பேரூர் ஸ்ரீ சாந்தலிங்க அடிகளார் மடத்திற்கு எழுந்தருளி ஆண்டு விழாவை நிகழ்த்தினார்கள்.

1927-ல் புதுவை அம்பலத்தாடும் சுவாமிகள் மடத்திற்கு எழுந்தருளி அப்போதைய தலைவர்களுடன் அளவளாவிச் சமய வளர்ச்சிக்குத் துணை தேடுமாறு வற்புறுத்தினார்கள்.

திருவோலக்கப் பொலிவு

‘...முருகன் சேவடி வருடி யுருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணிறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்குஞ் செவியும், பொன்னொளிரும் மணி மார்பும்,கருமைக் கதிர் விரிக்குந் திருமேனியும், ‘சண்முகா - சண்முகா' என்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு என் உள்ளத்தில் ஓவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையும் கவரும்; எவர்க்கும் எளிதில் இன்பூட்டும் .....’ -

‘ஸ்வாமிகளின் உருவத் தோற்றத்தைப் பார்த்ததுமே “இதோ ஒரு பெரியார் இருக்கிறார்” என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகும். அவருடைய வாய்மொழிகளைக் கேட்டு, அவருடைய வாழ்க்கை முறையையும் கவனித்தோமானால்