பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வல்லிக்கண்ணன்

சைவத்துக்கும் தமிழுக்கும் செய்ய முடியாத அளவுக்கு ஏராளமான பணிகளை செய்து முடித்தார் !

மற்ற மடாபதிகள் எல்லாம் மடம்-மடம் சார்ந்த கோயில்கள்-திருத்தல யாத்திரைகள் மட்டுமே திருமடங்களின் பணிகள் என்று நினைத்து மடத்துக்குள்ளேயே அமர்ந்து சைவம் வளர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் ஒருவர்தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சமயத் தொண்டாற்றியதோடு நில்லாமல் சைவம்-தமிழ் ஆகிய இரண்டின் வளர்ச்சிக்காகவும் ஏராளமான சமாசங்களையும் தமிழ்ச் சங்கங்களையும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் உருவாக்கினார்.

அக்கால கட்டத்தில் தமிழ்கூறும் நல்லுலகினர் அனைவராலும் போற்றி மதிக்கப்பட்ட தமிழறிஞர்கள், புலவர் பெருமக்கள் அனைவரும் ஞானியாரடிகளை அழைத்து சைவ சித்தாந்தப் பெருவிழாக்கள், தமிழிலக்கியம் போற்றும் மாநாடுகளை எல்லாம் நடத்தினார்கள். ஞானியாரடிகள் தலைமையில் ஆய்வுச் சொற்பொழிவு நடத்துவதைப் பெரும் பேறாகக் கருதினார்கள் அவர்கள்.

திரு.வி.க., மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி, மு. கதிரேசன் செட்டியார், கா. நமச்சிவாய முதலியார், த.வே. உமாமகசுேவரம் பிள்ளை, டி. கே. சிதம்பரநாத முதலியார், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, கரந்தைக்கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற பேரறிஞர்கள் எல்லாம் ஞானியாரடிகள் தலைமையில் மிகச்சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தி ஞானியாரடிகள் முடிவுரை மூலம் பாராட்டுப் பெற்றவர்களானார்கள்.

ஏனைய மடங்கள் போல - திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளின் மடம் ஏராளமான கோயில்களையும், சொத்துக்களையும் கொண்ட மடமல்ல; ஆனால் ஞானியாரடிகள் அவர்களே - விலைமதிக்க முடியாத சைவ சிந்தாந்தப் பொக்கிஷமாகவும்- தமிழ்க் கருவூலமாகவும் விளங்கினார்கள்.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, டாக்டர் உ. வே. சாமினாதய்யர் போன்றவர்களுக்கெல்லாம் கூட