தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
55
காரணமாகின்றது. மேலும், காது முதலிய மற்றப் பொறிகள் தம்பால் வந்தவற்றையே அறியும் ஆற்றலுடையன; ஆனால், கண்கள், தாமே பொருள்களினிடம் சென்று அறியும் வன்மையுடையன.
கண்கொண்டு நாம் உலகைப் பார்க்கின்றோம். பார்க்கப்படும் பொருள்கள் மூவகை. 1. அறிவு இல்லா உலகம் 2. சிறிதறிவுடைய நாம். 'நம்மைத் தாழ்த்திக் கூறுகின்றாரே’ என்று சில அன்பர்கள் கருதலாம். பிறந்த ஞான்று நாம் ஒன்றையும் அறியாதிருந்தோம். பின்னர்த் தாயினை அறிந்தோம். தாய் சுட்டி அறிவிக்கத் தந்தையை அறிந்தோம். இருவரும் தந்த அறிவால், பெரியோர், வந்தோர், வெளியோர், உபாத்தியாயர், ஞானகுரு ஆகியோரை அறிந்தோம். இவர்கள் எல்லோரும் தந்த அறிவாலும் இதுவரை நாம் நிறைந்த அறிவினராகவில்லை. இதனை அறிவுடையோரையே குறிக்கொண்டு கூறுகின்றேன். ஏனெனில் பேதையோர் தாம் பெற்றதையே பெரிதென்று தவறாக எண்ணும் எண்ணத்தினர். பல்லாற்றலும் பெற்ற அறிவு கொண்டு ஊகிக்கின், காணாப் பொருளொன்று என்று உணரவியலும்".
திருக்குறள் விளக்கவுரை ஆசிரியர்களுள் கோ. வடிவேல் செட்டியார் ஒருவர். இவர் பரிமேலழகரின் உரைக்கு விளக்கவுரை எழுதி... இல் முதன்முதலாக வெளியிட்டவர். இவர் ஞானியாரடிகளைச் சென்று வணங்கும் வழக்கமுடையவர். செட்டியாரை ஞானியார் கவர ஈர்ப்பின் திறவு எங்கே இருக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?
ஒரு சொற்பொழிவில் சேவலைப் பற்றி ஞானியாரடிகள் சொல்லுகிறார். அதற்குத் தொல்காப்பிய மரபியில் 48-ஆம் சூத்திரத்தை எடுத்துக்காட்டி நச்சினார்க்கினியர் கூறியபடி, சேவல் எனும் பெயர் பறப்பனவற்றுள் ஆண்பாற்கெல்லாம் உரித்து: அவற்றுள் மயிலுக்கு ஆயின் அஃதாகாது என்று சூத்திரத்தின் வழியே பொருள் கூறி முருகன் ஊர்ந்து செல்லும் மயிற்காயின் சேவல் என்று கூறலாம்" என்பதை அடிகள் கூறினார். இவையெல்லாம் அவரது சொற்பொழிவு ஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
ஞானியாரடிகள் மதுரைத் தமிழ்ச் சங்கம் (1901) தோன்றவும் கரந்தைத் தமிழ் சங்கம் (1911) தோன்றவும் காரணராக இருந்திருக்கிறார். இவ்விரண்டு சங்கங்களும் தமிழ்