பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில்லைத் திருக்கோவில்

99

னிறம் அடையப்பெற்றான். இத்தகைய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்குளத்தை அப் பல்லவன் புதுப்பித்தான். இதன் அழகிய திருச்சுற்று மண்ட் பத்தையும் படிகளையும் எடுப்பித்தவன் தொண்டை காட்டு மணவிற் கூத்தகிைய காளிங்கராயன் என்பான். இவனை நரலோக வீரன் என்றும், பொன்னம்பலக் கூத்தன் என்றும் போற்றுவர்.

நரலோகவீரன் திருப்பணிகள்

சிறந்த சிவபத்தகிைய நரலோகவீரன் முதற் குலோத்துங்கனின் படைத்தலைவனாகப் பணிபுரிந்தவன், தில்லைக் கூத்தனிடம் எல்லேயில்லாப் பேரன்பு பூண்டவன். அவன் திருக்குளத்தை அணிசெய் ததோ டன்றி நூற்றுக்கால் மண்டபம் ஒன்றையும் அமைத்தான். சிவகாமியம்மனின் தனிக்கோயிலுக்குத் திருச் சுற்று மதில்களும் மீண்டபங்களும் சுற்றுவெளியும் அமைத்தான்.

அநபாயன் திருப்பணி

சிவகாமியம்மன் திருக்கோயில் அமைத்தவன் அநபாய சோழனை இரண்டாம் குலோத்துங்க வைான். இதனை இராசராச சோழன் உலாவும் தக்கயாகப் பரணியும் குலோத்துங்கச் சோழன் உலாவும் கூறுகின்றன. இக் கோவிலின் முன்னமைந்த மகா மண்டபம் பெருமிதமான தோற்றமுடையது. இதன் கண் உள்ள இரட்டைத் தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத் தூண்களில் கற்சங்கிலித் தொடரைத் காணலாம். இக் கோவிலின் திருச்சுற்று மண்டபங்கள் சிற்பங்கள் நிறைந்தவை. கூத்தாடும் மகளிரும் வாத்தியக்காரரும் சிற்பங்களாகத் திகழ்கின்றனர்.