பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழ் வளர்த்த நகரங்கள்


என்பது மாணிக்கவாசகரின் திருக்கோவையார்ப் பாடலாகும்.

தில்லையில் திருஞானசம்பந்தர்

சீர்காழிச் செல்வராகிய திருஞானசம்பந்தர் தில்லைக்கு எழுந்தருளினர். நகருள் நுழையும் போது எங்கும் புகைப்படலம் பொங்கிவருவதை நோக்கினார். மூவாயிரம் அந்தணர்கள் முன்னவனை எங்காளும் பிரியாது பணிபுரியும் பெருமை வாய்ந்த திருநகரம் என்பதைத் தெரிந்தார். அவ் அந்தணாளர்கள், தாம் கற்றாங்கு எரியோம்பும் காட்சியைக் கண்டு வியந்தார். உலகில் துயரம் உருதவாறு, பொதுநலம் பேணும் புனிதவுள்ளத்தால் அவர்கள் வேள்வி செய்யும் விதத்தை மதித்துப் பாராட்டினார். இத்தகைய தில்லையில் அமைந்த திருச்சிற்றம்பலத் தலைவன் பாதத்தைப் பற்றியவர்களைப் பாவங்கள் என்றும் பற்றா என்று உறுதி கூறினர். பொதுநலத் தொண்டர்களாகிய அந் தணர்களே ‘உயர்ந்தார்’ என்று உவந்தேத்தினார். ‘அவர்கள் உறையும் தில்லையில் உள்ள சிற்றம்பலம் தொல்புகழ் பெற்றது; அப்புகழ் மேன்மேலும் பெருகி ஏறிக்கொண்டும் இருக்கிறது ; ஆதலால் யான் தேனூறும் தீந்தமிழால் தில்லையைப் பாடினேன்’ என்றார்.

‘ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற்றம்பலத்(து) ஈசனை
இசையால் சொன்ன பத்து’

என்பது ஞானசம்பந்தரின் திருவாக்காகும்.

தில்லையில் திருநாவுக்கரசர்

சோற்று வளத்தால் ஏற்றம் பெற்ற சோழ நாட்டில் தலைமை வாய்ந்த தெய்வத் தலமாகிய தில்லை