பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய மதுரை

33


விளங்கியது திருமருதமுன்றுறையாகும். அஃது அடர்ந்த மருதமரங்கள் நிறைந்த கரையைச் சார்ந்த துறையாகும். நீராட வருவார் தங்குதற்குரிய தண் பொழில் அமைந்த அழகிய துறையாகும். கூடலா ரெல்லாம் வந்து கூடினலும், கூடற்கோமான் படை யுடன் வந்து நாடிலுைம் தங்குதற்கு வாய்ப்புடைய வளமான பொழில் சூழ்ந்த எழில்துறையாகும். நீர் வற்றிய வேனில் காலத்திலும் கரையைச் சார்ந்து நீர் சென்றுகொண்டிருக்கும் முன்னடித் துறையாகும். ஆதலால் அது திருமருதமுன்றுறை யென்று புலவர் பாடும் புகழ்பெற்றது.

புதுப்புனல் விழா நடைபெறும் கன்னாளில் இத் துறைக்கண் குழலும் யாழும் முழவும் ஆகிய பல்வகை இன்னியங்கள் முழங்கும். அரசனால் தலைக்கோல் அரிவையென விருதுபெற்ற ஆடல் மகளிரும் பாடல் பாணரும் அத்துறையைச் சார்ந்த பொழிலிடத்தே ஆடல் நிகழ்த்துவர். நாடக மகளிரின் ஆடல் ஒலியும், இன்னியங்களின் பேரொலியும் கரையில் வந்து மோதும் வெள்ளத்தின் அலேயொலியுடன் சேர்ந்து இடிமுழக்கம் போல் ஒலிக்கும்.

இத்துறைக்கண் பாணர்கள் சென்று யாழிசைத்து மருதப்பண்ணை அருமையாகப் பாடுவர். அவர்கள் பாடப்பாட மைந்தரும் மகளிரும் நீரில் பாய்ந்து ஆடுவர் ; அவர் தம்முள் ஊடுவர்; ஊடலுணர்ந்து கூடுவர்; கூடி மகிழ்வர் ஒடிப் பிரிவர்: தேடித் திரிவர்; மலரைச் சூடித் தொழுவர். இங்ஙனம் இருபாலாரும் துறைக்கண் ஆடியமையால் வையைகீர் எச்சிலாயிற்று என்று கூறினர் இன்னொரு புலவர்.

த. வ. ந.-8