பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்த்த மதுரை

45


உண்மையை நன்கு விளக்கும். இதனே, வேளாண் வேதம்’ என்றும் ஒதுவர். இந்நூல் மதுரைமாநகரில் எழுந்த மாண்புடையதே.

இறையனார் வளர்த்த இன்றமிழ்

இனி மதுரைமாநகரில் எழுந்தருளிய சோம சுந்தரப்பெருமான் தன்னை வழிபட்ட தொண்டர் இருவர்க்குத் தண்டமிழ்ப் பாடல்கள் எழுதிக்கொடுத்தான். தருமி என்னும் அந்தணாளனுக்குப் பாண்டியன் சங்க மண்டபத்தில் தொங்கவிட்ட பொற்கிழியைப் பரிசாகப் பெறுதற்குரிய அரிய தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடிக்கொடுத்தான். அது குறுந்தொகை என்னும் பழந்தமிழ் நூலில் இடம்பெற்றுள்ளது. கற்புடைய மகளிரின் கருங்கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணமுண்டு என்று வலியுறுத்தும் அப் பாடல் ‘நலம் பாராட்டில்’ என்னும் அகத்துறையில் அமைந்த அழகிய பாடலாகும்.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய கட்பின் மயிலியல்
செறியெயிற்(று) அரிவிை கூந்தலின்
நறியவும் உளவோ, அேறியும் பூவே ?”

இறைவன் அருளிய இப் பாடலில் கடைச்சங்கத் தலைமைப் புலவராகிய நக்கீரர் பொருட் குற்றங் கண்டார். புலவனாக வந்த இறைவனிடம் நெற்றிக் கண்ணேக் காட்டினும் குற்றம் குற்றமே என்று சொல்லி அஞ்சாது வாது செய்தார்.

மதுரைத் திருக்கோவிலில் நாளும் யாழிசையால் பண்ணமையப் பாடிப் பரவிய பாணபத்திரன் என்னும்