பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழ் வளர்த்த நகரங்கள்


ஐந்தடி உயரமுள்ள சந்தன சபாபதியின் திருவுருவம் மிக்க அழகு வாய்ந்ததாகும். தில்லைக் கூத்தனை வழிபட்ட திருநாவுக்கரசர், அப்பெருமானது பேரழகை வியந்து பாடிய சிறப்பெல்லாம் ஒருங்கு திரண்டாற் போன்று சந்தன சபாபதி ஒளிவீசி ஆடுகிறார். குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் குமிழும் குறு முறுவல், பனித்த சடை, பவளம்போன்ற திருமேனி, அதில் அணிந்துள்ள பால்வெண்ணீறு, இனித்தமுடைய எடுத்த பொற்பாதம் இவையெல்லாம் அப் பெருமானது வடிவில் அமைந்துள்ள சிறப்பை என்னென்பது இதை யடுத்து வடக்குச் சுற்றுவெளியில் அட்ட லட்சுமி திருக்கோவில் அமைந்துள்ளது. தனலட்சுமி, தானியலட்சுமி, செயலட்சுமி, விசயலட்சுமி, சந்தான லட்சுமி, செளபாக்கியலட்சுமி, மகா லட்சுமி, கசலட்சுமி ஆகிய எட்டுத் திருவும் கட்டாக விள்ங்குகின்றனர். இவ் எண்மருள் செளபாக்கியலட்சுமி குதிரைமேல் ஆரோகணித்து அமர்ந்திருக்கும் காட்சி மிக நன்றாக இருக்கிறது. எல்லாச் செல்வங்களும் நிறைந்தவன் எத்துணைப் பெருமித வாழ்வு நடத்துவான் என்பதை அத் திருமகள் வடிவம் நினைவுறுத்துகிறது.

ஆறுமுகநயினார் கோவில்

சுவாமி கோவில் மேற்கு வெளிப்பிராகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகப்பெருமான் சங்கிதி ஒரு தனிச் சிறப்புடையது. தோகை விரித்தாடும் மயிலின் மேல் ஆறுமுகப்பெருமான் வேல்தாங்கிய வீரனாகக் காட்சி தரும் கோலத்தைச் சிற்பி ஒரே கல்லில் வடித்துள்ளான். ஆறு முகங்களும் ஆறு வேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் சிறப்புடன், கருணை பொழியும் முன் திரு