பக்கம்:தமிழ் வளர்ந்த கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் வளர்ந்த கதை

23


தேம்பா வணியால் ஓம்பி வளர்த்தார்
மேம்படு கால்டு வேலர் தமிழுக்கு
ஒப்பிலக் கணத்தை உவந்து கொடுத்தார்
ஒப்பில் ஜியூப் போப்பெனும் உயர்தவர்
தமிழ்மறை வாசகம் மொழிபெயர்த் தளித்தார்
தமிழ்மா ணவராய்த் தருக்கி விளங்கினார்
அகராதி வகுத்த அறிஞர் உவின்சுலோ
தகவுறத் தமிழைத் தாங்கிப் போற்றினார்.

வசனம்

இவ்விதமாக அயல்நாட்டிலே யிருந்துவந்த பிறமாெழி அறிஞரெல்லாம் தமிழைப் படித்தார்கள்., அதன் இனிமையிலே மனத்தைப் பறிகொடுத்தார்கள். தமிழை வளர்க்கவும் செய்தார்கள். அவர்களுக்கு இருந்த தமிழ்ப் பற்றுககூட நம் தமிழர்க்கு இல்லையே! ஐயோ! தமிழே ! தமிழ் நாடே!

பாட்டு

என்று பாரதி இரங்கி வருத்தினாா்
ஒன்று சேருவீர் தமிழை உயர்த்த
விழிமின் எழுமின் என்று முழங்கினார்
மொழியின் பெருமையை முழக்கினாா் எங்கும்

இசை வேறு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மைகெட்டு