உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 படங்களையும் செய்திகளையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள். இதே விதமான உபசாரம் நேரு பண்டி தருக்கு மட்டும் அல்ல,இலங்கை கொத்தலாவலைக்கும், பிலிப் பைன் தீவு ராமுலோவுக்கும் வழங்கப்படுவதைக் காங்கிரசார் கவனிக்கவில்லை. நேரு பண்டிதரின் பீக்கிங் விஜயத்தின் போது ராஜோபசாரம் நடந்ததென்றால், அதே விதமான உபசாரம் பர்மிய பிரதமர் சென்ற போதும் நடக்கிறது! தம்பி! டிட்டோ இங்கு வந்தார்! ராஜோபசாரம் எப்படி எப்படிச் செய்தார்கள்! அவர் வருகிற கப்பலை நமது கப்பல் கள் சென்று எதிர்கொண்டு அழைத்தன! டில்லியில் மக்கள் கூடி டிட்டோ ஜிந்தாபாத் போட்டனர்! மாலைகள் குவிந்தன! விருந்துக்கு மேல் விருந்து! வரவேற்பு வைபவம், டிட்டோ வைத் திணரடிக்கும் அளவுக்கு நடந்தது. ஆவடி காங்கிர சிலும், ராஜபவனத்திலும் அவருக்கு நடைபெற்ற பல்வேறு வகையான விருந்துகளும், கலா காட்சிகளும் சாமான்யமா! இப்போது ஆறு நாட்கள் நேரு பண்டிதர் டிட்டோவின் விருந்தாளியாக, யுகோ நாடு செல்கிறார். டிட்டோ என்ன, பண்பு அறியாதவரா!நேரு பண்டிதரின மனம் குளிரும் வண் ணம், தனக்கு இந்திய விலே கிடைத்த வரவேற்பு சாமான்யம் என்று கூறத்தக்க விதமாக, விருந்தும், உபசார மும் ஏற்பாடு செய்யாமல் இருப்பாரா? பார், பார்! எங்கள் பண்டிதருக்கு யுகோவில் கிடைக்கும் ராஜோபசாரத்தை என்று பேசிப பூரித்துப் போவதால் என்ன பலன்! டிட்டோ இங்கு வந்திருந்த போது, இங்கே அவருக்கு நடைபெற்ற ராஜோபசாரத்தைப் பற்றி, யுகோ நாட்டுப் பத்திரிகைகள் சக்கைப் போடு போட்டன! டிட்டோவுக்கு இந்தியாவில் இணையில்லா வரவேற்பு! ராஜபவனத்தில ரசமான விருந்து! மகாராஜாக்கள் மலர்மாரி பொழித்தனர்! மதுரமான இசை விருந்து அளிக்கப்பட்டது! நேர்த்தியான நாட்டியம! இந்தியாவின் தொழில் முயற்சியை டிட்டோ பார்வையிட்டார் இவ்விதமெல்லாம் யுகோ நாட்டுத் தினமணிகள் தலைப்பு கள் தரத்தான் செய்தன தம்பி! இவ்வளவு என்ன, இவகே உள்ள பத்திரிகைகள், பாண்டுங் மகாநாடு நேருவின் வெற்றி என்று புகழ்ந்தன அல்லவா, எகிப்து நாட்டிலே நாசிர், பாண்டுங் மகாநாட் டுக்குப் பிறகு சென்றதும், அவரை வரவேற்க மோட்டாரி லும் குதிரை மீதும் ஒட்டகை மீதும் கால் நடையாகவும்