உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25 பல்லாயிரக் கணக்கான எகிப்தியர் வந்தனர்.அவர்கள் என்ன முழக்கம் இட்டனர் தெரியுமோ? பாண்டுங் வீரரே வருக! இந்தியாவை வசீகரித்த இணையில்லாத் தலைவரே வருக! இப்படித்தான். இந்தோனேசியாவில் தெரியுமா! இருபத்தொன்பது நாடு களும் பெருமைப்படுத்திய தலைவர்களே, வாழ்க! என்று அந்த நாட்டு இதழ்கள் சுகர்னோ, ஜோஜோ ஆகிய தலைவர் களை புகழ்ந்து எழுதின! ஒருவர்க்கொருவர் உபசாரத்தைப் பொழிந்து கொள் வது, இன்றைய உலகிலே கொழுந்து விட்டெரியும் புதுமுறை. இதைக் கொண்டு, தப்புக் கணக்குப் போடுகிறார்கள் தம்பி! அவ்வளவுதான்! அமெரிக்கா உறவு பற்றியும், அந்த நாட்டினிடம் உதவி யும் கடனும் பெறுவதால் ஏற்படக்கூடும் இழிவு, ஆபத்து பற்றியும் ஆச்சாரியாரே சொல்லிச் சோதிக்க வேண்டி நேரிட் டதைக் காங்கிரஸ் நண்பர்கள் மறந்து விடுகிறார்கள். உலகமே உள்ளன்புடன் நேரு பண்டிதரைப் புகழ்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதனால் அவருடையஆட்சி யிலே காணக்கிடக்கும் அவலட்சணங்களை, அதனால் ஏற்படும் அவதிகளை, குறிப்பாக திராவிடத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துக் காட்டாமல் இருக்க முடியுமா! எடுத்துக் திருப்பது அறிவுடைமை தானாகுமா? காட்டா "மத்தாப்பு கொளுத்தும்போது பார்த்திருப்பாயே தம்பி! எவ்வளவு வண்ணம்! எத்துணை ஒளி/ஆனால் தம்பி!எவ்வளவு சீக்கிரத்தில் தீர்ந்து போய் விடுகிறது! அது போலத்தான் ராஜ தந்திர முறை காரணமாக நடத்தப்படும் உபசாரம் தரும் ஒளி ! சிறு அகல் விளக்கானாலும் பரவாயில்லை, மத் தாப்புப் போல அல்ல, நின்று நிதானமாக ஒளிவிட்டு இருளை அகற்றும். அதுபோலத்தான் உள்நாட்டிலேமக்களின் உள்ளம் குளிரும்படி ஆட்சி நடத்தினால், நிரந்தரமான பெருமையும் நிலையான செல்வாக்கும் கிடைக்கும். வெறும் நேத்திரானந் தத்தால் பலன் என்ன? நேரு பண்டிதரின் "உலகப் புகழ்' பற்றி ஓயாமல் பண் பாடும் பத்திரிகைகளே, உள்நாட்டு விவகாரத்தில், ஆட்சி யின் கோணல் காரணமாக ஏற்படும் அவதிகளைச் சுட்டிக் காட்டி, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண் டாடித் திணறுவது தெரியாததா! பழமொழி சொல்வார்களே, உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி என்று. அது போலல்லவா தேசீய ஏடுகளின் நிலைமை ஆகிவிடுகிறது? அ.க-2