உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 நாற்றமடிக்குமளவுக்கு ஊழல்கள் நிர்வாகத் துறையில் நாறு நாளைக் கொரு முறை மாற்றித் தீர வேண்டியவிதமாக அவசரமாகத் தீட்டப்படும் திட்டங்கள். முன்யோசனை இல்லாததால் ஏற்படும் கோடிக்கணக்கான பொருள் நஷ்டம். வீண் ஆடம்பரத்துக்காக விரயமாகும் பெரும் பணம். காகிதத் திட்டங்கள்! அவரைப் பற்றிக் கவைக்குதவாப் பாராட்டுரைகள்! பார்! தம்பி! பார், பார், பண்டிதரின் புகழொளியைப் என்று படம் காட்டுகிறார்களே காங்கிரஸ் நண்பர்கள்,அவர் கள் மறந்து விட்டிருப்பார்கள், அல்லது தெரியாததுபோலப் பாவனை காட்டுவார்கள். நீ மறந்திருக்கமாட்டாயே, பத்து நாட்களுக்குமுன்பு பத்திரிகைகளிலேவெளிவந்த செய்தியை. உலகமே கண்டு வியக்கிறது. எங்கள் பெரும் பெரும் அணைத்திட்டங்களை என்று பெருமை பேசினார்களே. அதிலே காணக்கிடக்கும் கோளாறு வெளிவந்து விட்டது. கோடி கோடியாகப் பொருள் செலவிட்டு, பெரும் பெரும் நூதனமாக யந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன, இந்தத் திட்டங்களுக்காக. முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே செலவிடப்பட்ட பணத்திலே பெரும்பகுதியை, அணைகள் கட்டும் திட்டம்தான் விழுங்கிவிட்டன! அதிலே நடைபெற்றுள்ள அவலட்சணத் தைக் கேள் தம்பி! பொறுப்பும் திறனும் உள்ள ஆட்சியிலே இப்படி நடைபெறுமா என்று யோசித்துப் பார்! கோபம் அடையாத காங்கிரஸாரைக் கேட்டு வேண்டுமானாலும் பார்! இந்த அணைத்திட்டங்களுக்காக, கோடி கோடியாகக் கொட் டிக் கொடுத்து வாங்கினார்களே யந்திரங்கள், அவைகளில் கிட்டத்தட்ட பாதி சும்மா கிடக்கின்றனவாம்! கேட்டாயா? விபரீதத்தை ! ஏழை மக்களின் வியர்வை,பணமாக்கி இந்தக் கருவிகள் வாங்கப்பட்டன! ஆனால் வேலைக்கு உபயோகமாக வில்லை. பொய்க்கால் குதிரை! அச்சு முறிந்த வண்டி! அஸ்தி வாரமற்ற கட்டிடம்! இது போலாகி விட்டது. ஏன்?" ணம் செய்தும் பிரமச்சாரியாக இருக்கக் காரணம்? இந்தக் கருவிகள் பழுதாகிப் போனால், பொருத்தக்கூடிய சில்லறை சாமான்கள் கிடைக்கவில்லையாம்! எப்படி இருக்கிறது நிர் வாகம்! இலாடம் கிடைக்கவில்லை, குதிரை கொள்ளு தின் கிறது. கொட்டிலில் கொழுக்கிறது. வண்டியும் மேட்டில் கிடக்கிறது! ஆணி கிடைக்கவில்லை, அதனால் ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கிய அழகான படம், பரணில் கிடக்கிறது! சாவி இல்லை, எனவே பூட்டு மூலையில் போட்டு வைக்கப்பட்டி கல்யா