உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

ருக்கிறது!ஓடு கிடைக்கவில்லை; ஆகவேதளத்துக்குத் தேவை யான சாமான்கள் துருப்பிடித்துக் கொண்டு கிடக்கின்றன! பாய்மரமில்லை; எனவே கப்பல் பாழாகிக் கொண்டிருக்கிறது? கூந்தல் இல்லை, மலர் வாடி உதிர்கிறது. இப்படி இருக்கிறது அணைத்திட்டத்திற்கென்று பெரும் பொருள் செலவிட்டு வாங் கிய யந்திரங்கள் சிறு துணைச் சாமான்கள் கிடைக்காததால், தூங்கித் துருப்பிடித்து போகும் காட்சி! எந்த நாட்டிலாவது இந்த அக்கிரமம் நடக்குமா? இவ்வளவு திறனற்று, அக்கறை யற்று எந்த தனிப்பட்ட முதலாளியாவது நடந்து கொள் வானா? பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே? அவர்களுக்குப் பதில் கூற வேண்டி வருமே? என்ற அச்சம் கொண்ட எந்த சர்க்காரிலாவது இப்படி ஊழல் நடை பெறுமா?இன்னேரம் பொது மக்கள் சீறி இருப்பார்கள் பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகள் தேளாகி இருக்கும்,சம்பந் தப்பட்ட அமைச்சர் பதவியிலிருந்து விரட்டப் பட்டிருப்பார். இங்கு? இதோ பண்டிதரின் அடுத்த பவனி,ரஷ்யாவில் என்று வேடிக்கை காட்டுகிறார்கள். பணம் பாழாகிறது,ஊழல் தலை விரித்தாடுகிறது. இது மட்டும்தான் என்று எண்ணி விடவேண்டாம்- இது இப்போதுதெரியும் ஊழல். இது போல் ஏராளம்!ஆட்சி-அப் பழுக்கற்றது, அதைக் குறைகூறுவது கூடாது, என்று கூறு கிறார்களே காங்கிரஸ் நண்பர்கள், சரியாகுமா? அரசாங்க நிர்வாகம் ஒழுங்காக இல்லை. நாடகமேடை யில் நடிக்கப்படும் கேலிக்கூத்தாக இருக்கிறது, சர்க்காரின் போக்கு. பொது மக்களின் பணம் விரயமாகிறது! இவ்விதம் சொன்னால், காங்கிரஸ் நண்பர்களுக்குக் கண்கள் சிவந்து விடுகின்றன. அரசாங்கம் திறமைக் குறைவாக நடந்து கொள்கிறது! என்று கூறுங்கள்.பக்கத்தில் கல்இருக்கிறதா நம் தலை மீது தூக்கிப்போட, என்று தேடுவார்கள்,தெளிவை இழந்துவிடும் அளவுக்கு தேசீயம் கொண்டுள்ள காங்கிரஸ்காரர்கள்! முட்டாள்தனம். என்று சொல்லுங்கள்...! ஏ! அப்பா. ஆவேசம் வந்தவர் போல் ஆடி, அடிப்போம், உதைப்போம் என்றெல்லாம் ஏசுவர். ஆனால் இவ்வளவும் உண்மை. நாம் சொன்னால் கோபம் கொப்பளிக்கும் - அடக்கி வைக்க முடியாமல் ஒருகாங்கிரஸ் ஏடு நேரு ஆட்சியைப் பற்றி சில தினங்களுக்கு முன் இவ்வித மாகவெல்லாம் கூறியிருக்கிறது. காங்கிரஸ் நண்பர்கள் போலவே இந்த ஏடு எமது பண்டிதருக்கு உலகமே பாதபூஜை