உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29 வேறென்ன செய்வார்கள், நம்மீது சீறி விழுகிறார்கள்! ஒரு உண்மையைத் தெரிந்து கொள் தம்பி! நம் மீது கோபிக் கிறார்களே தவிர அவர்கள் மனதிலேயும் உண்மை உறுத் தாமலில்லை. "இந்தப் பாவிகள் நடந்து கொள்வதும், இந்தப் பயல்கள் கேலி செய்வது போலத்தான் இருக்கிறது. பண்டித நேருகூட அடிக்கடி அந்த மாநாடு இந்த மாநாடு என்று அலைந்து கொண்டிராமல், ஆட்சியை ஒழுங்காக்கி ஊழலை ஒழித்து, நிர்வாகத்தைச் சரிப்படுத்தி,மக்கள் சுபிட்ச மடையும்மார்க்கத்தை கவனித்தால் நன்றாகத்தான் இருக்கும் அந்தப் பயல்கள் குத்திக் கிளறிக் காட்டும்போது கோப மாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆர அமர யோசித்துப் பார்த்தால், வெட்கமும் துக்கமுமாகத்தான் இருக்கிறது" என்று அவர்கள் மனம் எண்ணாமல் இல்லை. அதை மறந்து விடாதே! ! உண்மை, அவர்களையும் நம் பக்கம் மெள்ள மெள்ள ஆனால் நிச்சயமாகக் கொண்டுவந்து சேர்த்துவிடும். அந்த பக்குவம் ஏற்படுகிற வரையில், பழித்துத்தான் பேசு வார்கள், பகைவர் போல் தான் நடந்து கொள்வார்கள். நாம் தான் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் வேளை நெருங்க நெருங்கத் தாயின் கூச்சல் அதிக மாகத்தான் இருக்கும். 29-5-1955. தம்பி, அன்புள்ள, Jimmy na ஆவடியும் காவடியும் ஆவடிக் காங்கிரஸ் மாநாடு பாண்டூங் மாநாடு. கடிதம்: 4 ஆவடியில் நடைபெற்ற காங்கிரசின் அலங்காரத்தைக் கண்டதாலே சொக்கிப் போனேன்! அங்கு நேரு பண்டித ரைப் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல “தலைவர்கள்" மொய்த்துக் கொண்டிருந்தனர். மோட்டார்கள் மட்டும், இது வரை யாரும் பார்த்திராத அளவு அங்கு! ஏ!அப்பா அப்படிப் பட்ட ஒரு மகாநாட்டை இதுவரை யாரும் கண்டிருக்க முடி யாது. லலிதா பத்மினியின் நாட்டிய நாடகமென்ன, வேறு பல கலா நிகழ்ச்சிகள் என்ன-நேர்த்தியான காட்சிகள்,