உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 மிக நேர்த்தியான காட்சிகள்! அப்படிப்பட்ட மகத்தான செல்வாக்கை எதிர்த்து வேலை செய்ய முடியுமென்று எண்ணு கிறீர்களே, அப்பாவிகளே! முடிகிற காரியமா! இவ்விதம் சில காங்கிரஸ்காரர்கள் பேசுவது பற்றி குறிப் பிட்டு எழுதியிருக்கிறாய்; தம்பி! நீயேகூட ஆவடியால் ஓரள வுக்கு மயக்கம் அடைந்திருக்கிறாய் என்று தெரிகிறது. இது சகஜமும் கூட! இன்று காங்கிரஸ், சர்க்கார்! எனவே, எப்போதும் சர்க் காரின் தயவினாலே, சொத்து சுகம் ஆகியவற்றை காப் பாற்றிக் கொள்ளவும் அதிகமாக்கிக் கொள்ளவும் விரும்பும் "கனதனவான்கள்" யாவரும் அங்கு சென்று, கட்டியம் கூறி நின்றனர். அதனாலே அங்கு பெரிய திருவிழா! அதைக் கண்டு சிலர் சொக்கி விடுவதும் சகஜந்தான்? ஆனால், இலட் சியத்துக்காகப் போரிடும் யாரும், இத்தகைய திருவிழா கண்டு மயக்கமடைந்து விடமாட்டார்கள். என் தம்பி! எங்கள் ஊர் “கருட சேவை உற்சவத்துக்கு இலட்சக் கணக்கிலே மக்கள் வருகிறார்கள்! கும்பகோணம் மகா மகம், மதுரைச் சித்திரைத் திருநாள், திருவண்ணாமலை தீபம், திருமலை புரட்டாசி, தில்லை ஆருத்ரா இப்படி இருக் கிறது ஒரு பெரிய பட்டியல்! இதிலே கூடும் மக்கள் இலட் சக் கணக்கில். இவைகளைக் கண்ட பிறகும், ஆண்டு தோறும் இவை நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிந்தும் தான், சுயமரியாதை இயக்கம் துவக்கப்பட்டது பதை மறந்துவிடாதே! இவ்வளவு இலட்சம் இலட்சமாக மக்கள் தேர் திருவிழாவுக்குக் குவியும் போது, சுய மரியாதை இயக்கம் நடத்துவதாலே பயன் என்ன என்று ஆயாசப் படுவது சரியல்ல- இவ்வளவு கோலாகலமான திருவிழாக் கள் நடைபெற்றும், சுயமரியாதை இயக்கம் எழுவது தடைப் படவில்லை! அதை எண்ணிப்பார் உண்மை விளங்கும். இலட் சக் கணக்கான பொருள் செலவிட்டு இரசமான விழாக்களை நடத்துகிறார்கள். தங்க மயிலில் தகப்பன் சாமி வருகிறார்! தையல் நாயகியோ தங்கப் பல்லக்கில்! வெள்ளித்தேர்! தங்க ரிஷபம்! பொற்கவசமிட்ட கருடன்! இப்படிக் கண்ணுக்குக் கவர்ச்சிகள்! வேத கோஷ்டிகள்! பஜனைக் கூட்டங்கள்! பக் தர்கள் வெள்ளம்போல்! சீமான்கள் சீமாட்டிகள்! வேல்விழி, சுழற் கண், குழல் அழகி, குயிலி இப்படிப்பட்ட பட்டாளம் பவனிவரக்காண்கிறோம்.அமெரிக்காவில் ஆறு ஆண்டு, இங்கி லாந்தில் ஏழாண்டு, சென்ற மாதம் ஜெர்மனி, இப்படி மேல் நாடுகள் சென்று திரும்பிய மேதாவிகள் கலந்துகொள்வதைக் காண்கிறோம். கவர்னரின் காரியதரிசி, சர்க்காரின் பிரதம இஞ்சினீயர், டாக்டர், பிரபல வக்கீல், உயர் நீதி மன்றத்