உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31 தின் அதிபர் இப்படிப்பட்ட பதவியாளர்களைக் காண்கிறோம். ஆடை அணிகள் அலங்காரங்கள் அமோகமாக! நாத வெள்ளம்! வாணவேடிக்கை!-இவ்வளவும் இருந்திடக் காண் கிறோம். எனினும், இவைகளாலே நாம் மயக்கம் அடைய வில்லை சொக்கிப் போகவில்லை, சோர்வு கொள்ளவில்லை, கும்பலோடு கோவிந்தா போட்டுவிடவில்லை, இவைகளைக் காண்கிறோம். என்னே இவர்தம் போக்கு! எரியும் தணலில் கற்பூரக் கட்டியைத் தேடிக்கொண்டிருக்கிறார்களே! என்னே இவர் தம் விசித்திர சித்தம்! என்று எண்ணிக் கொள்கிறோம். இவ்வளவும் வீண் ஆரவாரம், கவைக்குதவாதவை, என்று எடுத்துக் கூறுகிறோம். இங்கு சென்றீரே இன்னவித மாகத் தொழுதீரே, அங்கு சென்றீரே அந்தத் தேவனை வேண்டிக் கொண்டீரே, வேலழகன் விழாவிலும் வேழ முகத் தான் உற்சவத்திலும் கலந்து கொண்டீரே, அன்பரீர்! கண்ட பலன் இன்னது என விண்டிட இயலுமா? உலகுக்குக் கிடைத்த பலன் இன்னது என எடுத்துரைக்க இயலுமா? என்று கேட்கிறோம். திருவிழா சென்று திரும்பியவரும்கூட அசட்டுச் சிரிப்புடன் - ஆமாம்- ஒரே கூட்டம் - இடியும் இடர்ப்பாடும்தான் கண்டோம் என்று கூறிடக் கேட்கிறோம். சுயமரியாதைப் பணியினை தொடர்ந்து நடாத்துகிறோம்.ஒரு ஆவடி கண்டு, சொக்கிப் போனவர்கள் பேசுவது கிடக் கட்டும். ஒவ்வோர் தலத்திலும் ஆண்டுக்கோர் ஆவடி நடை பெற்ற வண்ணமிருக்கிறது எனினும் பகுத்தறிவு பரப்பும் பணி பட்டுப் போகவில்லை, வளர்ந்த வண்ணம் இருக்கிறது. உனக்குத் தெரியுமோ தெரியாதோ, இலட்சக் கணக்கான மக்களை இழுக்கும் வைகுண்ட ஏகாதசி, சீரங்கத்தில் "ரொம்பப் பிரமாதம்" என்கிறார்கள் அல்லவா, அந்த ஏகா தசியின்போது, அந்தஊரிலே உள்ள சுயமரியாதை இயக்கத் தோழர்கள், ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைவு, இரயில் நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில், ஒரு பெரிய ஓவியம் தயாரித்து வைத்திருந்தனர். என்ன ஓவியம் என்று எண்ணு கிறாய். ஏசுநாதர் சிலுவையில் அறைபடும் காட்சி புறமும், புன்னைமரத்தில் அமர்ந்து புல்லாங்குழல் ஊதும் கண்ணனிடம், களவாடிய சேலைகளைத் தந்தருளும்படி, கோபிகையர் குளத்திலிருந்தபடி கேட்கும் காட்சி மற்றோர் புறமும்! ஏகாதசி காண வந்தவர்கள், இந்தப் பகுத்தறிவு ஓவியக் காட்சியைக் கண்டு, அடெ! அடடே! இதைப் பாருடோய்! அட இப்படித்தான் இருக்கு! செச்சே. மானத்தை வாங்கித் தொலைக்கிறானுங்க! ஒரு