உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32 இப்படிக் கடவுள் செய்வாரா? இப்படிச் செய்பவர் கடவுள் ஆவாரா? இப்படி என் கதை கட்டினார்கள்? நாம் என்னத்தைக் கண்டோம்! என்று அவரவர் மனப்பக்குவத்திற்குத் தக்கபடி, பேசிச் சென்றனர். ஆவடியில் நடைபெற்ற திருவிழாவைப் பிரமாதப்படுத்திப் பேசுவதாலே, காங்கிரசிலே மலிந்து கிடக்கும் குறைபாடுகளை ஒரேயடியாக மறைத்து விடவும் முடியாது; ஆட்சியிலே காணக் கிடக்கும் அவலட்சணங்களையும் மறுத்துவிட முடியாது. ஒரு ஊரிலே தொடர்ந்து ஒரு பத்து நாளைக்கு நாடகம் நடைபெற்றால், அந்த ஊரிலே உள்ள சபல புத்தி படைத்தவர்கள், நடை நொடிபாவனை, உடை, உரையாடல் ஆகியவைகளிலே, தங்களையுமறியாமல் நாடக பாணியைக் கலந்து கொள்வார்கள்! ஒட்டுவார் ஒட்டிபோல், நாடகபாணி வேலை செய்யும்-சில நாளைக்கு-பலர் பார்த்துக் கேலிபேசி அதைப் போக்கும் வரையில். ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்துவிட்டால் போதும், அந்த ஊரில் உள்ள வாலிபர்களுக்கு, உடலிலே கோயம் ஏற்பட்டே விடும்-உயரத் தாண்டுதல், தாவிக் குதித்தல், சைகிள் சவாரியில் வேலை காட்டுவது, இப்படிச் சர்க்கஸ் செய்வதால்! அதுபோலவே தம்பி, ஆவடி போய்விட்டுவந்தவர் சில நாளைக்கு அந்தப் பாணியில்தான் பேசுவார்கள். பிறகு, நிலைமை அவர்களுக்கும் உண்மையை உணர்த்தும். நேரு பண்டிதருடைய பிரத்யேகத் திறமையே, இத்த கைய "சொக்க வைக்கும்' காரியத்தைச் சோர்வில்லாமல் செய்வது தான்! பாண்டுங் மகாநாடு பற்றிப் பத்திரிகைகளிலே பார்த்தா யல்லவா! இதிலே காட்டிய வர்ண ஜாலங்களுக்காகச் செலவழிக் கப்பட்ட தொகையின் அளவு தெரியுமா என்று கேளுங்கள் காங்கிரஸ் நண்பர்களை! தலைவர்கள் தங்குவதற்காக இரண்டு பெரிய ஒட்டல்கள் ஒதுக்கப்பட்டன. அந்த ஓட்டல் அறைகளைப் புதுப்பித்து வசதிகளைப் பெருக்க 15 இலட்சம் ரூபியா அதாவது 80 இலட் சத்து 60 ஆயிரம் வெள்ளி (மலாய் நாணயம்) செலவிட்டனர். மகாநாட்டுக்காக மொத்தம் 6 கோடி ரூபியா, அதாவது 160 இலட்சம் வெள்ளி இதுவரை செலவாகி இருக்கிறது என்று, ஏப்ரல்) தேதி மலாய் பத்திரிகை ஒன்று தெரி வித்தது.