உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

.34 கோடி என்கிறார்கள் அதற்கான செலவு! சரி! ஆனால் இவை களின் பலனாக, ஏழை கண்டது என்ன? இடர்ப்பாடு எது களையப்பட்டது? எதேச்சாதிகார முறை ஒழிக்கப்பட்டதா! இல்லாமை இயலாமை துடைக்கப்பட்டதா! ஓவியத்தில் உள்ள பழக்கொத்துதானே, உங்கள் ஆவடிகள்," என்று கேட்கிறார்கள், சொக்குப்பொடியால் மயக்கமடையாதவர்கள். 'இங்கே நடைபெறும் ஆவடியைக் காட்டி, இந்நாட் டிலே செல்வாக்கு எவ்வளவு செழிப்பாக இருக்கிறது காணீர் என்றும், பாண்டூங் காட்டி வெளி நாடுகளில் கிடைக்கும் மகத்தான செல்வாக்கைக் காணீர் என்றும் விளம்பரம் பேசி வருகிறீர்கள் - எனினும் காய்ந்த வயிறுடன் இங்கும், கண் ணீருடன் வெளிநாடுகளிலும், இந்நாட்டு மக்கள் வதைபடு கின்றனர். அதை இம்மியளவு போக்கவும் இந்த ஆவடி களும், பாண்டூங்குகளும் பயன்படக் காணோமே' கேட்கின்றனர், திருவிழாக் கண்டு தெளிவை இழக்காத வர்கள். என்று பர்மியப் பிரதமர் இருக்கிறாரே நூ, அவர் நேரு பண்டித ருக்கு அத்யந்த நண்பர்! சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் அங்கு வந்து அளவளாவுகிறார். பண்டிதரும் அந்தப் பக்கம் போகும் போதெல்லாம், நூவினால் உபசரிக்கப்படுகிறார். பத்திரிகை கள் பத்தி பத்தியாக இந்த "நேசம்" பற்றிச் செய்திகளைத் தருகின்றன. ஆசியாவிலே கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளை மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலே மூண்டு கிடக்கும் பிரச்சினை களையும் ஒரு சேரத் தீர்த்துவைக்கும் “அபாரமான வேலை யின் நிமித்தம் கூடினரே, பாண்டூங்கில். அதற்காகப் புறப் பட்ட போதுகூட நேரு பண்டிதர், இரங்கூனில் தங்கி, அங்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொண்டார். நூவுடன் பண்டிதர் பர்மிய உடையில், சிரித்துப் பேசி மகிழும் சினிமாக் காட்சி போன்ற படம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இவ்வளவு நேசம், பாசம், இருக்கிறது இரு தலைவர்களுக்கு. இது தந்துள்ள பலன் என்னவென்று கேட்டுப் பார்த்த துண்டா, தம்பி! இவ்வளவு தோழமையின் விளைவாக, பர்மா வாழ் மக்களுக்குக் கிடைத்துள்ள உரிமைகள், வசதிகள், சலுகைகள் என்னவென்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? "இந்தியர்கள் விட்டுவந்த பிறகு பர்மாவில் அநேக விஷயங்கள் நடந்து விட்டன. வீடுகளையும் நிலங்களை யும் பர்மியர்கள் வந்து ஏற்றுக் கொண்டு அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள்; யுத்தம் காரணமாக விட்டுச் சென்ற நிலபுலன்களை, வீடு வாசல்களை சுவான்தார்கள்