உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35 ஏற்றுக் கொள்ளலாம் என்று சட்டம் இருப்பினும், இரங் கூனில் மட்டும் அது செல்லுபடியாகாது. நகருக்கு வெளியே விஷயம் எப்படி யென்றால், வீட்டுக்காரர் களுக்குக் குடித்தனக்காரர்களை வெளியேற்றும் உரிமை சட்ட பூர்வமாக மறுக்கப்பட்டது. பார்க்கப்போனால் வீட்டுக்குடையவர்கள் எல்லாரும் இந்தியர்கள். அதிலே வசிப்பவர்கள் பர்மியர்கள். இப்போது இன்னொரு பெரிய கண்றாவி. ஒரு குடித்தனக்காரன் தன் ஜாகையை மற்றொரு குடித்தனக்காரனுக்கு மாற்றி விடுவான். வீட்டுக்காரன் கையைக் கட்டிக்கொண்டு பார்த் துக்கொண்டிருக்கவேண்டும். ஒன்றும் சொல்வதற் கில்லை. அட, வீடே வேண்டாம், நிலமே வேண்டாம், விற்றுவிட்டுப் போவோம் என்றாலும், இன்னொரு சட்டம் இருக்கிறது. பர்மியப் பிரஜைகளுக்குத் தவிர வேறொருவனுக்கு ஸ்தாவார சொத்துக்களை விற்பனை செய்யவோ அடைமானம்.. வைக்கவோ குத்தகைக்கு விடவோ அனுமதிகிடையாது. இந்தியரி டம் விலைக்கு வாங்கவும் பர்மியர் எவரும் தயாராக இல்லை இதனால் அங்கு அடைமானத்தில் கடன் வாங்கியுள்ள இந்தியர்கள்கூட தங்கள் ஸ்தாவரச் சொத்துக்களைக் கடனுக்கு ஈடாக மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் செய்வதின்னதென்றறியாமல் இருக்கிறார்கள். சுதந்திர சட்ட அரசியல் சட்டப்படி உத்தியோகம் இனி பாமியர் களுக்கே என்று ஆகிவிடவே, அனேகர் வேலை இழக்கும் திண்டாட்டத்திலும் சிக்கியிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த மாதிரி ஒரு புதிய பெரிய மசோதாவையும் பர்மியப் பார்லிமெண்டுகொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. விவசாயத்தில் ஈடுபட்டி ராத நிலச்சுவான்தார்களின் நிலங்களை எல்லாம் சர்க் கார் எடுத்துக் கொண்டு விடுவது என்பதே இதன்சாராம் சம். விவசாயிகளாக இருந்தால் தலா ஐம்பது ஏக்கர் வைத் துக் கொள்ளலாம். இங்கே சுமார் ஐயாயிரம் இந்தியர் வரை 26 இலட்சம் ஏக்கராவுக்குச் சொந்தக்காரர் கள். அதன் வருமானம் நாற்பது கோடி வரை மதிக்கப் படலாம். பர்மிய விவசாயி மந்திரி சட்டதிட்ட மாக, நிலம் எல்லாம் ராஜ்ய சர்க்காருக்கே சொந்தம்; நிலச்சுவான்தாரருக்கு அதை வைத்துக் கொண்டு அதில் சாகுபடி செய்வதற்கு மட்டுமே உரிமை இருக் கிறது; சர்க்கார் உசிதம் போல் இந்த ஏற்பாட்டை ஒழுங்கு செய்யவோ, மாற்றவோ, ரத்துச் செய்யவோ உரிமை பெற்றது... என்றார்.