உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 பொதுவாக இந்தியர் நிலைமை திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அந்நிய நாட்டவர் களாகவே மதிக்கப்படுகிறார்கள்;வருமானம் மிகவும் குறைவு; ஆகையால் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுகிறது; எனவே பர்மியரிடையே அந்தஸ்து என்பது அவர்களுக்கு அதிகம் இல்லை. தம்பி! பர்மாவில் உள்ளவர்களில் தமிழரே அதிகம். பர்மாவில் இன்றுள்ள நிலைமை இது. அறுபது நாட்களில் ஐந்து நாடுகளைச் சுற்றிவிட்டு வந்த ஆனந்த விகடன் எழுத் தாளர் ஒருவர் தீட்டியதைத்தான் தந்திருக்கிறேன். இத்தனை இன்னலுக்கு ஆளாகி யிருக்கிறீர்களே, இங்கி ருந்து சென்றவர்கள், நேரு பண்டிதருக்கு பர்மிய முதல்வரி டம் உள்ள நேசமும்பாசமும் என்னபலன் கொடுத்திருக்கிறது?. நேரு பண்டிதரைக் காணும்போதே, பர்மிய முதல்வரின் முகம் மலருகிறது, கட்டித் தழுவிக் கொள்கிறார், ஆசியாவின் வழிகாட்டி நீரே என்று உபசாரம் பொழிகிறார், விருந்து நடத்துகிறார், ஆனால் தன் சொந்த நாட்டுப்பிரச்சினை எழுகிற போது, இந்த நேசமும் பாசமும் ஓடி ஒளிகிறது. பர்மியரின் உரிமைக்களுக்காகவே பணியாற்றுகிறார். எமது பண்டிதருக் குள்ள செல்வாக்கினைப் பாரீர், அவர், 'செக்கு மாடென உழைத்திடுவீர், செல்வம் கொழித்திடச் செய்திடுவீர், அதை டாடாவும் பிர்லாவும் செல்லாக அரித்தாலும் சீறி எழாதீர்' என்று கூறினாலும் அதுதான் சோஷியலிசம் என்று எண்ணிப் பூரித்திடுவீர் என்று பேசுகிறார்கள். ஒருநாட்டின் தலைவருக்கு வேறொரு நாட்டிலே அபாரமான செல்வாக்கு இருக்குமானால், செல்வாக்குள்ள தலைவரின் நாட்டவருக்கு அந்தவேற்று நாட் டிலே, மதிப்பு உயரும், வசதிகள் கிடைக்கும், சலுகைகள் கூடப் பெறவழி ஏற்படும். இவர்களோ, பர்மாவில் பண்டித ருக்கு மிகுந்த செல்வாக்கு என்று பண் இசைக்கிறார்கள் என்று ஆனந்த விகடனைச் சோந்தவரே ஆயாசத்துடன் கூறுகிறார். பண்டிதரின் செல்வாக்கின் பொருள்தான் என்ன? ஆவடி காட்டியும் பாண்டூங் பற்றிப் பாராட்டிப்பேசியும் தென்னாட்டவர் காணும் பலன் என்ன? காவடி தூக்கித் திரியவேண்டி இருக்கிறது, எதற்கும் எப்போதும்! டில்லி நிதி மந்திரி தேஷ்முக் நாமெல்லாம் ஏதோ விளக்க மறியாதார் என்ற எண்ணத்தோடு பேசுகிறார். முதல் ஐந் தாண்டுத் திட்டத்திலே வடநாட்டுக்கே அதிகத் திட்டங்கள் செய்து தரப்பட்டன என்று குறை கூறுகிறார்கள் - ஏன் அப்ப டிச் செய்ய நேரிட்டது என்றால், திட்டம் முதலில் வடநாட்டுக் காகத் தீட்டினோம், என்கிறார். இது சமாதானம் என்று அவர் கருதுகிறார். அவ்வளவு பெரியவர் சொல்லுகிறாரே என் பதற்காக, இங்குள்ள அடிவருடிகளும், "ஆமாம் சாமி'