உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37 போடுகிறார்கள். திட்டம் தீட்டும்போது, ஏன் வட நாட்டின் கவனம் மிகுந்திருந்தது. தென்னாடு பற்றி ஏன் அக்கறை யற்ற போக்கு, அலட்சியம் ஏற்பட்டது என்பதற்கு அவரும் காரணம் கூறவில்லை; இங்கு உள்ளவர்களும் கேட்கக் காணோம். உங்களுக்கு இரண்டாவது பந்தியிலே சாப்பாடு போடப்படும் என்று விருந்து சாப்பிட்ட தெம்பில் ஏப்பம் விட்டபடி தேஷ்முக் கூறுகிறார். இங்குள்ள "பிக்ஷாந்தேஹி களும் ஏதோ பின் கட்டில் உட்காரவைத்துப் போட்டாலும் பரவாயில்லை, பசி வயிற்றைக் கிளறுகிறது என்று கூறுகிறார்கள்!! இது தானே ஆவடி தந்த அந்தஸ்து! சட்ட "பிக்ஷாந்தேஹி" என்று நாம் சொன்னால் காங்கிரஸ் நண்பர்களுக்குக் கோபம் கொதித் தெழுகிறது. ஆஹா! எங் களையா பிச்சைக்காரர்கள் என்று ஏசுகிறீர்கள், என்பார்கள். மைசூர் ராஜ்ய முதலமைச்சர் பேசியிருக்கிறார் இது போல! ! டில்லி சர்க்காரின் போக்கை மைசூர் சபையில் மிக வன்மையாகக் கண்டித்துப் பேசுகிறார்!டில்லி, தென்னாட்டுத் தலைவர்களை, அவர்களை இங்கு நாம் படேல் என்று புகழ்ந்தாலும் சரி, திலகர் என்று கொண்டாடினாலும் சரி, அவருக்காகக் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு மேலே விழுந்து வேலை செய்தாலும் சரி அவர் மேனியில் துளி தூசி பட்டாலும் என் கண்ணிலே மிளகாய்ப்பொடி விழுவது போல உருகி இருக்கிறது என்று உருகிப் பேசினா லும் சரி, 'அவருடைய ஆட்சியை ஆதரிப்பதையே என் தவ மாகக் கொண்டுவிட்டேன்' என்று பேசிப் பணியாற்றி வந் தாலும் சரி, எப்படிப்பட்ட செல்வாக்கை இங்கே பெறக்கூடி யவராக இருந்தாலும், அந்தத் தலைவர்களை அங்கு பிச்சைக் காரர்கள் போலத்தான் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்து, சற்றுக் கோபமாகவே பேசுகிறார். "மத்திய சர்க்காரிடம் நாம் சொல்லும் போதெல் லாம், நாமும் நமது யோசனையைக் கூற வேண்டும்; ஏதோ பிச்சைக்காக வாங்கப் போகும் போக்கிலே நடந்து கொள்ளக் கூடாது." என்று இடித்துரைக்கிறார். இதன் பொருள் விளக்கமாக இருக்கிறதே, தம்பி! ஏன் காங்கிரஸ் நண்பர்களுக்கு மட்டும் விளங்கவில்லை! டில்லியில் தென்னகத்துத் தலைவர்களைப் பிச்சை வாங்க வருபவர்களை நடத்துவதுபோல நடத்து கிறார்கள் என்பதைத் தோழர் அனுமந்தையா, தனியான தோர் பாணியில் எடுத்துரைக்கிறார். "அவ்வப்போது, கடன் வேண்டும், மானியம் வேண்டும் என்றெல்லாம், மத்தியசர்க்காரிடம் கெஞ்சிக் கேட்டபடி இருக்க வேண்டிய நிலைமை எப்படி இருக்கிற தென்றால், மத்திய சர்க்கார் "வசதிகளை" குவித்து