உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 வைத்துக் கொண்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இராஜ்ய சர்க்காருக்கே உரிமையான தான விஷயங்களில்கூட, இப்படிச் செய்யுங்கள் அப்படிச் செய் யுங்கள் என்று வற்புறுத்துகிறது, கடன் தருகிறேன் மானியம் தருகிறேன் என்று ஆசைகாட்டி!! தன்னிடம் உள்ள ஏராளமான ‘வேசதிகளை வைத்துக் கொண்டு, மத்திய சர்க்கார், மெள்ள மெள்ள, ஆனால் வெற்றிகரமாக, இராஜ்ய சர்க்காரின் நடவடிக் கைகளிலே புகுந்து, ஆதிக்கம் செலுத்துகிறது. மத்திய சர்க்காரின் போக்கு எப்படி இருக்கிறது என் றால், அமெரிக்கா, பணம் கடனாகவும் இனாமாகவும் கொடுத்துத் தன் ஆதிக்கத்தை இங்கும் வேறு பல நாடு களிலும் புகுத்துகிறதே, அதுபோல இருக்கிறது. தம்பி! இவ்வளவும் கூறுபவர், வகுப்புவாதி, விஷமி அல்ல. பிற்போக்கு வாதியல்ல; காங்கிரஸ்காரர் தான்! ஆனால் இவ ருக்கு முதுகெலும்பு இருக்கிறது. வடநாட்டுத் தலைவர்களுக்கு வால்பிடித்தால் நமது அரசியல்வாழ்வு ஒளிவிடும் என்ற அடி மைப் புத்தியில்லை. ஆகவே, அஞ்சாமல் நிலைமையைக் கூறு கிறார். ஆவடி பார்! அதன் அற்புதம் கேள்! என்று தெம் மாங்கு பாடிக் காட்டினாலும், காவடி தூக்கித் திரியும் நிலைக்குத் தென்னாடு வருவது கண்டு மனம் வெதும்பிப் பேசுகிறார். பிச்சைக்காரரை நடத்துவது போல நடத்துகிறார்கள். இராஜ்ய விவகாரங்களிலே நுழைந்து ஆதிக்கம் செலுத் துகிறார்கள். அமெரிக்கா பணத்தை வீசி, பல்லிளிக்கச் செய்து, தன் படைவீடாகப் பல நாடுகளை அமைத்துக் கொள்வது போல, டில்லியும் செய்கிறது. இவ்வளவு குற்றச்சாட்டுகளை ஏவுகிறார் தோழர் அனுமந் தையா! ஆவடிகள் நடத்துவதால் கிடைக்கும் பலன் தானே, தம்பி! வேறென்ன? இது திருவிதாங்கூர்- கொச்சியில், முதலமைச்சராக முன்பு இருந்த தோழர் கேசவன் என்பவர் ஓரிரண்டு திங்களுக்கு முன்பு மலாய் நாடு சென்றார். கோலாலம்பூரில் மலையாளிகள் அவருக்கு வரவேற்பும் விருந்தும் நடத்தினர். அங்கு அவர் பேசியது என்ன தெரியுமா? ஆவடியின் பெருமையைப்பற்றி யும் அலகாபாத் பண்டிதரின் அளவற்ற செல்வாக்கைப்பற்றி யுமா? இல்லை; இல்லை! டில்லியின் மாற்றாந் தாய்ப் போக்கி னைக் குறித்துத்தான் பேசினார். தாயகத்திலிருந்து வந்த தலைவரை, வாழ்த்தி வரவேற்று, ஏதோ நாங்கள் தான்,