உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39 பிழைப்புக்கு வழிதேடிக் கொண்டு இந்தக் கண்காணாச் சீமைக்கு வந்து சேர்ந்தோம், அங்கே தாயகம் தளைகள் ஓடித் தெறியப்பட்ட நிலையில் தன்னரசு நடாத்துகிறதே, தரணி யெங்கும் பரணி பாடிவரும் நேரு பண்டிதரின் ஆட்சி நடக் கிறதே,எப்படி இருக்கிறது? தாயகம் இன்பம் வழிந்தோட வேண்டுமே? என்று கேட்கிறார்கள். தோழர் கேசவன் முன்னாள் முதலமைச்சர், அதையா கேட்கிறீர்கள் அன்பர் களே? என்று கூறி பெருமூச் செறிகிறார். "நாங்கள் புதிய கைத்தொழில்களைத் தொடங்க இடையறாது மத்திய சர்க்காரின் உதவியை நாடி வந் திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு புதிய கைத்தொழிலும் வட இந்தியாவிலே தொடங்கப்படுகிறது. பிரம்மாண்ட மான பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் தற்போது, பம் பாய்க்கு அருகில் உள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு வருவதையும், மண் ஆராய்ச்சிப் பாக்டரியும் அப்பகுதி யில் அமைக்கப் படுவதையும் இதற்கு உதாரணமாகக் காட்டலாம். மத்திய அரசாங்கம் இத்தகைய மாற்றாந் தாய்ப் போக்கை அனுஷ்டிப்பது கண்டிக்கத் தக்க தாகும்." தோழர் கேசவன் என்பவரின் பேச்சு, இது !! கண்டிக்கத்தக்கது என்கிறார் காரணமும் காட்டுகிறார். கண்டனம் பிறக்கிறது, அது பிறவாதிருக்கத்தான் ஆவடி அலங்காரம் காட்டப்பட்டது. ஆவடி மூலம், காவடி தூக்கிகளாக இருக்கத் தென்னாடு இசைகிறதா, இணங்குகிறதா, என்பதுதான் பரிக்ஷை பார்க்கப்பட்டது. இந்தச் சூட்சமத்தைப் புரிந்து கொள்ளாமல் ஆவடியைப் பார்த்தீர்களா, என்று கண்ணையும் வாயையும் அகலத் திறந்து கொண்டு, அன்பர் சிலர் கேட்கிறார்கள். என்ன செய்யலாம் தம்பி! அவர்களின். மனமயக்கம் தெளிய வேண்டும் - அதற்கான முறையில் நாம் பணியாற்ற வேண்டும். 5-6-1955 அன்புள்ள, Jimmy wz