உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

ஹரித்துவாரம் வந்து சேர்- எனக்கு இப்படி ஒரு தந்தி. என் சுபாவம், 'உனக்குத் தெரியும், ஏன், ஏறக்குறைய கழகத் தோழர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதானே. பக்கத் திலே உள்ள ஆற்காடு போவதானாலும் நாலு நண்பர்கள் கூட வேண்டுமே எனக்கு, அப்படிப் பழகிப்போன என்னை ஹரித் துவாரம் வரச் சொல்கிறார்: என்ன செய்வது? கிளம்பினேன்: தோழர் குருசாமி இரயிலடி வந்திருப்பதாக நினைவு. பத்து நாட்கள் ஹரித்து வாரத்தில் இருந்தோம், ஒரு ஐயர் வீட்டில். அவர் அவர் காலஞ் சென்ற பேரறிஞர் எம்.என். ராய் களின் இயக்கத்தவர். எனவே, எங்களை அன்புடன் தமது இல்லத்தில் வைத்து, உபசரித்தார். உங்களில் பலருக்குத் தெரிந்திராது தம்பி! பெரியார் அங்கு தான், வால்மீகி இராமாயணம் பற்றிய குறிப்புரைகள் தயா ரித்தார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுதின கவனம் இருக்கிறது. அந்த ஹரித்துவாரம் 'சாதுக்களின்” கோட்டை!எந்தத் தெருவுக்குச் சென்றாலும், சந்நியாசிகள்! எவ்வளவு "கம்பீர மாக நடந்து செல்கிறார்கள் தெரியுமா! அவர்களும் சரி, கொழுத்துக் கிடக்கும் பெரிய பெரிய பசுக்களும் சரி. ஹரித் துவாரத்து வீதிகளிலே நடமாடும் உரிமை தமக்கே என்ற தீர் மானத்துடன் இருப்பதுபோலத்தான் தோன்றும். கங்கை - நடுப்பகல் இரண்டு மணிக்குக் கால் வைத்தா லும் "ஐஸ் போல இருக்கிறது,கொட்டுகிறது. ஹரித்துவாரத்தில், ஆற்றோரத்தில் அழகான சோலைகள் பழ முதிர் சோலைகள்! சோலைகளை வேலிகளாகக் கொண்ட பெரிய மடங்கள் -ஒவ்வொரு மடத்திலும் நூற்றுக்கணக்கான சாமியார்கள்: உலக மாயையை மிக நன்றாக உணர்ந்து உல கோர்க்கு உபதேசம் செய்யும் "புனிதத் தொண்டு"புரியும் அவர்களுக்காக, நாள்தோறும் மூட்டை மூட்டையாகக் கோதுமை மாவும், டின் டின்னாக மணம் கமழும் நெய்யும்! இந்த மடங்களில் ஒரு குறையும் இருத்தல் ஆகாது என்பதற் காக ஏராளமான ‘“சொத்து3 சாசனப்படுத்தப் பட்டிருக் கிறது. மாலை வேளைகளிலே பெரியார் உலாவச் செல்வார்.சாலை யில் உடன் நான்செல்வேன். வெண்ணிறத் தாடி;பொன்னிற மேனி;ஆரஞ்சு நிறச் சால்வை நான் கொட்டும் குளிருக்குப் பயந்து முரட்டுத்துணிச் சட்டை போட்டுக் கொண்டு, அதற் குள் கரங்களை விட்டுக் கொண்டு, கை கட்டிய வண்ணம் பின்னால். சாது சந்நியாசிகளைக் காண்பதையே அவர் அ.க-3