உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

22 வேலையாகக் கொண்ட அந்த நாட்டு மக்கள், ஹரித்துவாரம் இதுவரை காணாத மகிமை பொருந்திய குரு மகான், தன் பிரதம சீடனுடன் செல்கிறார் என்று எண்ணிக் கொண்டு, பக்தியுடன் கைகூப்பித் தொழுவர். இப்போதும் மனக்கண் முன்னால் அக்காட்சியைக் காண முடிகிறது; எங்களுடன் மணி இருப்பார். ஓஹோஹோ! மணி என்றதும், ஆச்சரியத் தால் கண்களை அகலத் திறக்கிறாயா தம்பி! விடுதலை அச்சகத் தில் மணி என்றோர் அச்சுக் கோர்ப்போர் இருந்தார். அவர் பெரியாருக்குப் பணிவிடை செய்வதற்காக வந்திருந்தார், மணி அவரைக் குறிப்பிட்டேன்; அப்போது ஈ.வெ.ரா. யம்மையார் பற்றிய நிழல் உருவச் செய்தியும் கிடையாது. இவ்வளவு மடங்கள்-கவாத்துக் கொடுத்து, காக்கி உடை அணிவித்து, கையில் துப்பாக்கியைக் கொடுத்து விட் டால், பட்டாளத்திலே "சர்தார்களாகக் கூடிய உடற் கட்டமைந்த சன்னியாசிகள் கூட்டம் கூட்டமாக-அவர் களின் பராமரிப்புக்காக இலட்சக் கணக்கில் பொருட் செலவு -அவர்களோ இகலோகத்தின் இழிதன்மையைப் பற்றியும் பரலோகத்தின் பெருமையைப் பற்றியும் உபதேசம் செய்வர். இந்த விசித்திரக் காட்சி, என் உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்களைக் கிளறும். இப்படியும் ஒரு நாடா? ஊரார் உழைப்பைத் தின்று கொழுத்துக் கொண்டு, முக்திக்கு வழி காட்டுவதாகக் கூறிக் கொண்டு, ஒரு “பட்டாளமே" இருக்கி றதே! எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பயனற்ற கூட்டத்தை அனுமதிப்பார்களா! இங்கு அடிதொழுது கொண் டிருப்பதைப் பெறற்கரிய பேறு என்றல்லவா கருதுகிறார்கள்; வேதனை நிரம்பிய விசித்திரமாக இருக்கிறதே, என்றெல் லாம் எண்ணிக் கொள்வேன். சம்சாரி உழைத்து சன்யாசி கொழுக்க தருமம் புரி எனல் ஆஸ்திகமா? அது சரியில்லை என்பது நாஸ்திகமா? என்று உடுமலை நாராயணகவி “சொர்க்கவாசல் படத்துக் குப் பாடல் தீட்டினார். கே.ஆர். ராமசாமி பாடினார். நண்பர் கள் சிலரும் கேட்டு இன்புற்றோம். நீ கேட்டிருக்க முடியாது தம்பி. சென்சார் அதைக் கத்தரித்து விட்டு பாரதப் பண்பை காப்பாற்றி விட்டதாகப் பூரிப்படைந்தனர். அந்தப் பாடலும் அதற்குரிய காட்சியும் தயாரிக்கப்பட்டபோது, எனக்கு ஹரித்துவாரக் காட்சி நன்றாகத் தெரிந்தது. நேரு பண்டி தருக்கு, இந்த “மாமிசமலைகளை” க் கண்ட கொந்தளித்திருக்கிறது. தும், உண்மையிலேயே கோபம் ஆனால், பாமர மக்களின் அன்பை இழக்க நேரிடுமே என்ற