உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43 அச்சம் அவரை வாட்டி வதைத்தும் இருக்கிறது ;எனவேதான் அவர் அரித்துவாரத்தில் கண்ட‘ஆள் விழுங்கிகளை'"ப்பற்றிய கண்டனத்தை, வேறொரிடம் சென்று, ஜாடைமாடையாகக் குறிப்பிட்டுப் பேசினார் - 50 இலட்சம் சாதுக்கள் இருக்கிறார்கள் நமது நாட்டில் -- இவர்களில் ஒரு சிலர் உண்மையானவர் களாக இருக்கலாம்,- பெரும் பாலானவர் பிறர் உழைப்பைத் தின்று கொழுப்பவர்கள்- இவர்கள் நாட்டுக்குப் பெரியதோர் சுமை - நஷ்டம் என்ற கருத்துப்பட நேரு பண்டிதர் பேசினார். அதுமட்டுமல்ல! அரித்துவாரத்தைப் பற்றியே அலட்சிய மும் அருவருப்பும் கலந்த முறையில் குறிப்பிட்டார். அவர் பேசினார், 'ஹரித்துவாரம் இந்துக்களின் புண்ணியஸ்தலமாகக் கருதப்பட்டு வருகிறது" என்று. கவனித்தாயா, தம்பி! அவர் பேச்சை. ஹரித்துவாரம். புண்ணியஸ்தலம் என்று கூறவில்லை - அப்படிக் கருதப்பட்டு வருகிறது! நான் கருதவில்லை, பாமரர்கள் கருதுகிறார்கள் அவ்விதம் என்ற கேலி அதிலே தொக்கி நிற்கிறது, தெரி கிறதா. அவர் அப்படி ஒன்றும் கேலி பேசவில்லை. நீயாகக் கற்பனை செய்கிறாய் என்று பக்தர்களும் கூறக்கூடும். காங் கிரஸ் நண்பர்களும் கூறக்கூடும். ஏன் வீண் சந்தேகம்? பண்டிதரின் பேச்சு முழுவதையுமே கூறுகிறேன், அப்போது விளக்கமாகிவிடுகிறது. . "அரித்து வாரம் இந்துக்களின் ஸ்தலமாகக் கருதப் பட்டு வருகிறது. ஆனால் எனக்கு நாட்டில் எங்கெங்கு அபுவிருத்தி வேலைகள் நடந்து வருகின்றனவோ அந்த இடங்களே புண்ணியஸ்தலங்களாகத் தோற்றமளிக் கின்றன." நேரு பண்டிதர் சொகுசான வாழ்க்கை நடத்துவதற் கரகச் சாமியார் கோலம் பூண்ட சோற்றுத் துருத்திகளைப்ப பற்றி, நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதை அறி யும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி பிறக்கத்தானே செய் யும் - அவர்களுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டு காலம் கழித்துவிடுவோம் என்று வேதியத் தலைவர் இங்கு நடந்து கொள்ளும் முறையுடன் இதை ஒப்பிடும்போது, நேரு பண்டி தரிடம் மதிப்புக்கூட பிறக்கிறது. ஆனால் அந்தோ! மறு கணமோ, அவர் பிரச்சினையை விட்டுவிட்டு, வெகு வேகமாக வேறு பக்கம் சென்றுவிடுவதைக் காண நேரிடுகிறது. கோபமும் வருகிறது. வருத்தமாகவும் இருக்கிறது. நச்சரவம் புரளுகிறது என்று தெரிந்து, தெரிவித்துவிட்டு. என்ன செய்யச் சொல்லவேண்டும்- நச்சரவம் நெளியும் இடம் இது. இதைப்போய் நாதன் அருள் பெறும் தலம் என்கிறார்களே. நல்லவர்களே! நாசத்துக்கு இடமளிக்காதீர்