உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44 கள். நச்சரவத்தை ஒழித்திட வாரீர். நச்சரவம் குடிபுகும் புற்றுக்களை ஒழிப்போம். புற்றுக்கள் தோன்றக்கூடிய காட்டி னையே அழிப்போம்,கிளம்புங்கள், என்று சொல்லத்தானே வேண்டும். தண்டச் சோற்றுத் தடிராமன்கள் இலட்சக்கணக் கிலே உலவுகிறார்கள், இவர்களை நம்பி உழைத்துச் சேர்த்த தைக் கொட்டி அழ வேண்டாம், என்று தானே அறிவுரை கூற வேண்டும்; ஏமாளிகளை ஏய்த்துப் பிழைப்போரைச் சாட வேண்டும்; சட்டத்தின் துணையையும் நாடி, இத்தகைய சழக் கர் கூட்டத்தைக் கலைக்கவேண்டும்; மக்களுக்குத் தெளிவும் துணிவும் பிறந்திடத் தக்கவகையில் பகுத்தறிவு புகட்ட வேண்டும். நேரு பண்டிதர் இதைச் செய்கிறார் இல்லை!? நச்சரவம் உலவுகிறது. நாவற் பழமும் தின்போம் வாரீர்! என்று ஒன்றுக்கொன்று ஒட்டாத முறையில், எதையோ கூற விரும்பி, இடையே பயந்து, வேறு எதையோ பேசிவிட்டுப் போயிருக்கிறார். ஹரித்துவாரத்தை அவர் புண்ணியஸ்தலமாகக் கருத வில்லை- கூறுகிறார். நீங்களும், பேதமை கொள்ளாதீர்கள். புண்ணியஸ்தல மாவது பாம பூமியாவது என்று மக்களுக்கு அறிவுரை கூறி கிறாரா - இல்லை!! மாறாக, கும்பமேளம கண்டு களிக்கும் பெரும் கூட்டத்தை, இவர் கண்டு களிப்படைகிறார்!! சாதுசன்யாசிகள் என்றபேரால் சோம்பித்திரிந்து,சொகு சாக வாழும் சழக்கரைக் கண்டித்துவிட்டு, அடுத்த கணம், ஐந்தாண்டுத் திட்டம், அணு தண்டு யுகம், ஐசன் அவர் போக்கு என்று, வேறு பிரச்சினைகளை எடுத்துக் கொள்கிறார்!! புண்யஸ்தலம் எனக்கு ஹரித்துவாரமல்ல, எங்கெங்கு அபிவிருத்தி வேலைகள் நடக்கிறதோ, அவைதாம் எனக்குப் புண்யஸ்தலம் என்கிறார்; ஆனால், இவர் பெற்றுள்ள இந்தப் புத்தறிவை மற்றவரும் பெற வேண்டும் என்று விரும்புவ தாகத் தெரியவில்லை! எனக்குச் சீரகச் சம்பாவில் சாதம், தக்காளி சூப், கோழிக் கறி வறுவல் இவைதான் பிடிக்கும் என்று, புளித்த காடியும் புழுத்துப்போன கருவாட்டையும் சுவையான உண்பண்டம் என்று எண்ணிக் கிடப்போனிடம் கூறிப் பயன் என்ன? அவர்களின் மனப்போக்கை அல்லவா மாற்றவேண்டும். அவர்களைச் சாது சன்யாசிக் கோலத்தில் உலவும் சடலங் களைக் கொழுக்கச் செய்யும் சேவை'யில் ஈடுபட விட்டுவிட்டு, எனக்கு இது பிடிக்காது, என் காசி சிந்திரி, என் கங்கை பக்ரா நங்கல், என் கயா சித்தரஞ்சன்,என் புண்ணியஸ்தலம் அபிவிருத்தி வேலை நடக்கும் இடம் என்று பேசிப் பயன் என்ன?