உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45 இங்குதான், நாம் தேவைப்படுகிறோம், தம்பி ! பெரிய இடத்திலே உள்ளவர்கள், பாமரரின் சீற்றத்தைக் கிளறிவிடக் கூடிய ஒரு சொல்லும் கூறமாட்டார்கள்! உலகுக்கு உபதேசம் செய்வார்கள்! ஊராரிடம் பகுத்தறிவு பேசமாட்டார்கள். “ஓட்டு இருக்கிறதே தம்பி, அது “வாய்ப்பூட்டு போட்டு விடுகிறது!! நாம்தான் இந்தப் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் பணியினைத் தொடர்ந்து செய்கிறோம், துணிந்து செய்கிறோம், தூய்மையின் நோக்கத்துடன் செய்கிறோம். தக்க பலன், மலரவும் காண்கிறோம், மகிழ்கிறோம். பட் வர்த்தனமாக, மூடத்தனத்தைக் கண்டித்துப் பேசி னால், பாமர மக்கள் சீறிப் பாய்வர், அரசியல் பீடத்திலிருந்து உருட்டிவிடக் கிளம்பக்கூடும்- எனவே ஜாடைமாடையாக மட்டுமே கூற முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்; அறிவு முதிர்ச்சியின் காரணத்தால் அல்ல, தம்பி, அச்சத்தால்தான். நமக்கு அவ்விதமாக அச்சம் எழக் காரணம் இல்லை. நாமோ அரசியல் ஆண்டிப் பண்டாரங்கள்! எனவே பிறர் அச்சத் தால் வாயடைத்துப் போகும் நிலையிலும், நாம் பேசுகிறோம்; ஏசுகிறார்கள், மேலும் பேசுகிறோம்; கல் வீசுகிறார்கள், தொடர்ந்து பேசுகிறோம்; காலிகளை ஏவுகிறார்கள், எனினும் பேசுகிறோம். நாம் இம்முறையில் துணிந்து செயலாற்றினால் தான், அச்சம் காரணமாக வாயடைத்துக்கிடப்போரும், நமக் கென்ன என்று ஒதுங்கிக் கொள்வோரும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்செறிவோரும், நாம்தானா இதற்கெல்லாம் என்று சலிப்படை வோரும், மெள்ளமெள்ளத் தமது போக்கை மாற்றிக் கொண்டு, ஜாடைமாடையாக முதலிலும், வெளிப் படையாகவே பிறகும், வீரத்துடன் எதிர்காலத்திலும் பேச முற்படுவர்; குன்றக்குடி அடிகளாரின் போக்கைக் கவனித்து வருகிறா யல்லவா தம்பி! பார்க்கிறாயல்லவா அவர் சைவ மாவட்டத் தில் சுயமரியாதை மாநாடு நடத்திவரும் வேடிக்கையை- பயனுள்ள வேடிக்கையை. உள. அதுபோல எண்ணற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்ட அரித்துவாரத்தை புண்யஸ்தலம் என்று ஏற்றுக்கொள்ள மறுத்து எங்கெங்கு அபிவிருத்தி வேலை நடக்கிறதோ அவை களே என் புண்யஸ்தலங்கள் என்று பேசிடும் பண்டிதரின் கருத்துரையை அலசிப் பார் தம்பி. புண்யம் என்றால் என்ன? எதைப் பாமர மக்கள் புண்ணியம் என்று எண்ணி ஏமாறுகி றார்கள்? அறிவுத் தெளிவுள்ளோர் எதைப் புண்ணியம் என்று கொள்வர்? மக்கள் வாழ வழி செய்வதும், வாழ்வின் வளத் தைப் பெருக்குவதும்தான் புண்ணியம் ". அதற்கான வேலை கள் நடைபெறும் இடமே புண்ணியஸ்தலம். மடங்களிலே