101
தால மெத்தக் கஷ்டப்படும் எமக்கு, வரியில் சலுகை செய்தளியுங்கள்; நாங்கள் செல்வத்தைப் பெருக்கிடும் சேவையில் ஈடுபட்டு இருப்பவர்கள் என்று கேட்டிடும் சீமான்கள் உள்ளனர்; லால்பகதூர் பார்த்திருக்கிறார்.
ஒரு பச்சிளங் குழந்தை என்னை வாழவிடு! விலையைக் கட்டுப்படுத்து!! என்று கேட்டிடும் காட்சியை அவர் கண்டதில்லை; காண்கிறார்; காணச் செய்தனர் தாய்மார்கள்.
எத்தனை உள்ளம் உருக்கும் நிகழ்ச்சி இது. ஆட்சிப் பொறுப்பில் உள்ளோர், காணக் கூசிடத்தக்கதோர் நிலை நாட்டிலே நெளிகிறது என்பதைக் காட்டிடவன்றோ, குழந்தையின் படம் பதித்த ‘ரட்சை’யைக் கட்டினார்கள் தாய்மார்கள்.
விலைவாசி விஷமென ஏறியபடி இருப்பது, எத்தகைய விபரீ தமானது, என்னென்ன கொடுமைக மகளுக்கு வழி செய்திடக் கூடியது என்பதனை விளக்கிட, அஃது எதிர்காலத்தையே ஆபத்தானதாக்கத்தக்கது என்பதனை எடுத்துக்காட்ட, ஒரு குழந்தை, நான் வாழ வேண்டும், நான் வாழவேண்டுமானால் என்னை வளரச் செய்திட என் குடும்பம் வழி பெறவேண்டும், அந்த வழி கிடைக்க வேண்டுமானால், விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கூறிடுவது போல,
என்னை வாழவிடு
விலைகளைக் கட்டுப்படுத்து
என்று கேட்டுக் கொள்வதாக வாசகத்தைப் பொறித்தளித்துள்ளனர்.
கட்டி முடித்த தொழிற்கூடங்கள், அமைத்தாகிவிட்ட தேக்கங்கள், உருண்டு ஒலி கிளப்பும் யந்திரச் சாலைகள் எனும் இவைகளைப் படம் போட்டுக் காட்டித்தான் எனன பலன், இந்தக் குழந்தையின் படம் கண் வழிச் செல்லாமலேயே எவர் நெஞ்சிலும் சென்று பதிந்து விடுகிறதே! உள்ளத்தை உருக்கிவிடுகிறதே!!
தாயைத்தான் தேடுகிறேன் என்று புலம்பிடும் குழவியைக் காட்டிலும், உள்ளத்தை உருகச் செய்திடக்கூடிய காட்சி இருந்திட முடியாது என்று இது நாள்வரை நான் எண்ணிக் கொண்டிருந்தேன், தம்பி! இந்தக் காட்சி இருக்-