உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

புதிய பண்ணைகள் அமைத்திடத் திட்டம் தயாரிக்க ஒரு குழு.

இங்கு நிறைவேற்றப்பட்ட நிலச் சீர்திருத்த சட்டத்தின் பலன்களைக் கண்டறிய ஒரு குழு.

தம்பி! எனக்கே சலிப்பாக இருக்கிறது, முழுப் பட்டியலைக் கூற. ஒன்றை மட்டும் கூறிவிடுகிறேன்—பொருளும் திட்டமும், நிபுணர்களும் மட்டும் அல்ல, ஆயிரம் பொலி காளைகள் கூட வருகின்றன அமெரிக்காவிலிருந்து.

உணவு முனையில் இதுவரை துரைத்தனம் மேற்கொண்ட முறைகளும் திட்டங்களும் எந்த அளவு பலனற்று, பாழ்பட்டுப் போயிருந்தால், இந்த அளவுக்கு அமெரிக்க உதவி நமக்குத் தேவைப்பட்டிருக்கும் என்பதை மட்டும், எதற்கெடுத்தாலும் எரிச்சல் கொள்பவர்களை விட்டு விட்டு,

‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’

என்ற பண்பறிந்தவர்களிடம் மட்டுமாவது கேட்டுப்பார்.

திட்டமிடுகிறார்கள், தெளிவில்லை.ஆயிரமாயிரம் கோடிகளை அள்ளி வீசுகிறார்கள், ஓரவஞ்சனை நடக்கிறது, ஒழுங்கீனம் இருக்கிறது, ஊழல் மலிந்திருக்கிறது என்று நம்மைப் போன்றவர்கள் கூறியபோதெல்லாம், காங்கிரஸ் துரைமார்கள், கனைத்தனர், கண் சிமிட்டினர், காகிதத்தில் எழுதப்பட்டிருந்த புள்ளி விவரங்களைப் படித்துக்காட்டினர், நமக்குப் பொருளாதார அறிவு போதுமான அளவுக்கு இல்லை என்று நையாண்டி செய்தனர்—நினைவிலிருக்கிறதல்லவா? இப்போது காங்கிரஸ் அரசில், மேல் மட்டத்திலேயே ஆராய்ச்சி நடத்துகிறார்கள்,

திட்டங்கள் ஏன் போதுமான பலன் தரவில்லை, என்பதுபற்றி,

காங்கிரஸ் தலைவர்களிலே சிலர், திட்டம் தீட்டியதிலே தவறு இல்லை, அதை நிறைவேற்றிய முறையிலே தான் கோளாறு வந்துவிட்டது என்கின்றனர்.

திட்டக் குழுவின் துணைத் தலைவரான அசோக்மேத்தாவோ, இல்லை! இல்லை! நிறைவேற்றிய முறை-