உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

விரட்டிய சிட்டுக்குருவிகளின் காதையை! நமது மக்களுக்கு இதனை எடுத்துக் கூறுவார் யாருளர்! கூறாதது மட்டுமோ! கருங்குருவி மோட்சம் பெற்ற காதையும், கரிவலம் வந்த சேதியுமன்றோ அவர்கட்கு இசை நயத்துடன் கூறப்பட்டு வருகிறது.

தம்பி! ஊர்ந்து செல்லும் ஆமையைக்கூட, பாய்ந்து செல்லும் புரவிகள் பூட்டிய வண்டியில் வைத்தால், போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் போய்ச்சேரும். இங்கு நாம் ஆமைகள் பூட்டிய அலங்கார வண்டியில் பாய்ந்தோடவல்ல குதிரையை ஏற்றிவைத்து, ஒரு விந்தைப் பயணம் நடத்திப் பார்க்கிறோம். கனி பறித்துச் சாறு எடுத்துப் பருகிடுவார் உண்டு; முறை; தேவை. இங்கு நாமோ, கனி எடுத்துச் சாறுபிழிந்து, அந்தச் சாற்றினைக் காய்கள் மேல் பெய்து தின்று பார்க்கின்றோம்.

இந்த நாட்டிலேதான் தம்பி! இந்த இருபதாம் நூற்றாண்டில், இத்தனை திரித்துக் கூறுவதும் இருட்டடிப்பிலே தள்ளுவதும், இட்டுக் கட்டுவதும், இழிமொழி பேசுவதும் தாராளமாக நடத்திச் செல்ல முடிகிறது, ஆதிக்கக்காரர்களால். இங்கு நாம் மனிதத் தன்மைக்காகவும், பகுத்தறிவுக்காகவும் வாதாடினால், நாத்திகப் பட்டத்தைச் சுமத்திவிடுவதும்,

ஒற்றுமைப்பட வேண்டும், பேதம் கூடாது, அதனை மூட்டிடும் ஜாதிகள் கூடாது என்று பேசினால், சமுதாயக் கட்டினை உடைக்கிறோம் என்று பழி சுமத்துவதும்,

பெண்ணை இழிவுபடுத்தாதீர் என்று பேசினால், ஒழுக்கத்தைக் கெடுக்கிறோம் என்று ஓலமிடுவதும்,

ஏழையின் கண்ணீரைத் துடைத்திடுக! என்று கூறினால், வர்க்கபேதமூட்டிப் புரட்சி நடத்தப் பார்க்கிறான் என்று பேசிப் பகை மூட்டியும்,

ஆட்டிப் படைக்கும் அளவுக்கு அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து வைத்துக் கொள்வது நல்லதல்ல; அதிகாரத்தைப் பரவலாக்கிடுக! என்று கூறினால், அரசு அமைப்பை உடைக்கப் பார்க்கிறான் என்று கொதித்தெழுந்து கூறியும், நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு மக்களின் நல்-

அ.க.—11