57
ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலைமை.
தம்பி! நான் இதைக் கண்டுதான் வருத்தம் கொள்கிறேன்—காமராஜர் இரண்டு வார்த்தை நம்மை ஏசிவிடுவது பற்றி அல்ல.
ஜனநாயக சோஷியலிச வாரம் கொண்டாடிவிட்டு, எதிர்க்கட்சியாவது ஆட்சிக்கு வருவதாவது! பைத்தியக்காரர்கள் பேசுகிறார்கள்! பகற் கனவு காணுகிறார்கள்! என்று ஏசுவது, ஜனநாயக முறையைப் புரிந்து கொள்ளாமலே, அதற்காக ஒரு விழாக் கொண்டாடிய கேலி நிரம்பிய குற்றமாகி விடுகிறது.
இவனுக்கென்ன யோக்கியதை! அவனுக்கு என்ன தகுதி?—என்று ஒரு கட்சி மற்றொரு கட்சியைக் குறித்துக் கேலி பேசுவது முறையுமல்ல—அந்தப் பேச்சு பலனும் அளிக்காது. பொதுமக்கள், தேர்தலின் போது யோசிக்க வேண்டிய விஷயமிது!
வேறு எவரும் ஆட்சிக்கு வரத்தேவையில்லாத முறையில், பொதுமக்கள் கொண்டாடத்தக்க விதத்தில், ஒரு குறையுமின்றி மக்களை, இன்று உள்ள ஆட்சி வைத்திருக்கிறதா—தகுதி திறமை குறித்து இவ்வளவு பேசுகிறதே என்று பார்த்தால்,
என்று காமராஜரே சொல்லுவதிலிருந்து, 17 ஆண்டுகளாக இந்த ஆட்சி நடந்தும், மக்கள் இன்னமும் சோற்றுக்கே திண்டாடுகிறார்கள் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது,
இந்த நிலையில் உள்ள ஒரு ஆட்சி, எம்மைத் தவிர ஆட்சி நடத்தும் தகுதியும் திறமையும் பெற்றவர்கள் யார் என்றா கேட்பது.?
உற்பத்தி பெருகினாலும் விலை குறையவில்லை.