99
தர்மபுரித் தொகுதியில் சில கிராமத் தலைவர்களுக்கு மந்திரிக் கவுண்டர் என்று பட்டப் பெயரே இருப்பதாக அறிந்துகொண்டேன்.
இவர்களைப் போன்றவர்களின் செல்வாக்குப் பற்றிய கணக்கு நாம்தான் மக்களின் இதயத்தை வென்று விட்டோமே என்ற நினைப்புடன் மட்டும் நாம் இருந்து விடும்போது நமக்குப் புரிவதில்லை. இந்தக் கணக்கு நமக்குப் புரியவேண்டும், தெளிவாக.
தேர்தல் நேரமாகப் பார்த்து ஆசை ஊட்டியும் அச்சமூட்டியும் எவரெவரை எப்படி எப்படி வளையச் செய்வது என்ற வித்தையில் வல்லவர்கள் நடத்திடும் நாடகத்தில் சில காட்சிகளை இனிக் காண அழைக்கிறேன், தம்பி!
★
முன்னாள் கள்ளுக்கடைக்காரர்:– போய்யா, போ! போ! காங்கிரசுக்காக வாதாட வந்துவிட்டாயா! எவ்வளவு கிடைச்சுது அதுக்கு. நாங்க எதுக்காகய்யா காங்கிரசுக்கு ஓட்டுப்போடணும், எங்க தலையிலே கல்லைப்போட்டுதே அதுக்காகவா; எங்க பிழைப்பிலே மண்ணைப் போட்டுதே அதுக்காகவா! என்னோட ஓட்டு காங்கிரசுக்குக் கிடையாது—நிச்சயமா— ஆமாம். என்வாயாலே காங்கிரசுக்கு ஓட்டுப் போடுன்னு ஒரு பயலுக்கும் சொல்லமாட்டேன்—நீ கையைப் பிடிச்சிக்கிட்டாலும் சரி, காலைத் தொட்டுக் கும்பிட்டாலும் சரி......
மண்டலம்:– உங்களோட கோபத்துக்கான காரணம் எனக்கு நன்றாகப் புரியுது உங்கபேர்லே ஒரு துளியும் எனக்குக் கோபம் கிடையாது. இரண்டு தலைமுறையாக நடத்திக் கொண்டுவந்த தொழிலைக் கெடுத்துவிட்டதே காங்கிரஸ், மதுவிலக்குச் சட்டம் கொண்டு வந்து என்ற கோபம் உங்களுக்கு. ஆனா.....
மு. க. க:– ஆனா என்னய்ய ஆனா......வழக்கமான உபதேசந்தானே? ஒரு சிலருக்குப் பண நஷ்டமென்றாலும் பலபேருக்கு நன்மை; புண்யகாரியம்; ஏழைகளோட குடும்பத்துக்கு நிம்மதி; இதைத்தானே