உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

        சொல்லப்போறே. கேட்டுக் கேட்டுக் காதும் புளித்துப் போயிருக்குது.......

மண்டலம்:– அய்யய்யே! நான் அந்தப் பழய காடிப் பேச்சையா சொல்லவந்தேன். மதுவிலக்குச் சட்டம் கொண்டுவந்தாகணும் என்று, ஒரே வற்புறுத்தல். மகாத்மா சொன்னதைக்கூட நிறைவேற்றாமல் இருக்கலாமா, காங்கிரஸ் மந்திரிசபை என்கிற எண்ணம். அதனாலே கொண்டுவரப்பட்டது மதுவிலக்குச் சட்டம்...

மு. க. க:– காரணம் சொல்றிங்களா, காரணம்! காரணத்தைச் சொல்லிவிட்டா, என் பெட்டியிலே காசு வந்து குவிந்துவிடுமா...

மண்டலம்:– சொல்ல வந்ததை முழுவதையும் கேட்காமலே கோபம் பொங்கிவருதே உங்களுக்கு, கேளுங்க. வந்த புதுசிலே மகாத்மா பேச்சை மறந்து விடக்கூடாது பாருங்க...அதனாலே சட்டம் போட்டாச்சி. இப்ப, காங்கிரசிலே, மதுவிலக்குச் சட்டம் இருந்தாக வேணும்னு பிடிவாதம் பேசுகிற ஆசாமிகளோட தொகை குறைச்சலாகிவிட்டுது. மதுவிலக்குச் சட்டம், எதிர்பார்த்த பலனைக் கொடுக்கல்லே என்கிற பேச்சு வலுவாகிவருது...

மு. க. க:– அதனாலே...! போலீசை நாலாபக்கமும் ஏவி வேட்டை ஆடிக்கிட்டு வர்ரிங்க... அதைத்தானே சொல்றே...

மண்டலம்:– அதைச் சொல்லவில்லைங்க....ஒரே அவசரம், ஆத்திரம்; பொறுமையாக் கேட்கவேண்டாமா. மதுவிலக்குச் சட்டம் பிரயோஜனமில்லே. அதை எடுத்து விடலாம் என்று இப்ப ஒரு அபிப்பிராயம் உருவாகிக் கொண்டு இருக்குது...

மு. க. க:– என்னது! என்னது! மதுவிலக்கு வேண்டாமென்று...

மண்டலம்:– மதுவிலக்குச் சட்டம் வேண்டாமென்று காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இப்ப கருத்து வளர்ந்து கொண்டிருக்குது. கொஞ்ச நாளிலே இந்தக் கருத்துக்கு அமோகமான ஆதரவு கிடைத்துவிடும் என்பதற்கான அறிகுறிகள் பளிச்சிட்டுக் காட்டுது...