101
மு. க. க:– என்னாலே நம்பமுடியல்லையே, மகாத்மாவோட பேரைச் சொல்லிக்கொண்டு மக்களோட ஆதரவு தேடுவது காங்கிரஸ் கட்சி. மகாத்மா, மதுவிலக்குச் சட்டம் வேதம்னு சொல்லிவிட்டாரு. அப்படிப்பட்ட சட்டத்தை எப்படி எதிர்த்து ஒழிக்க முடியும்...காங்கிரஸ் கட்சியாலே...
மண்டலம்:– இப்ப இருக்கிற காங்கிரசுக்கும் அப்ப இருந்த காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாததாலே இவ்விதம் பேசத்தோணுது உங்களுக்கு. இப்ப இருக்கிற காங்கிரசிலே, மகாத்மா காந்தியை முன்னே எதிர்த்துக்கொண்டு இருந்தவங்களோட தொகைதான் அதிகம். தெரியுதுங்களா, அவங்களோட எண்ணம், மகாத்மா என்னமோ தன்னைப்போலவே எல்லோரும் தவசிகள் என்ற நினைப்பிலே மதுவிலக்குச் சட்டம் கொண்டு வரச்சொல்லி கட்டளையிட்டார். ஆனா அது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதுதான்.
மு. க. க:– அதனாலே...போட்ட சட்டம் போட்டபடியே தானேய்யா இருந்து வருது...
மண்டலம்:– இருந்துவருது, ஆனா எத்தனை நாளைக்கு? சட்டத்தை எடுத்துவிட வேண்டும் என்ற குரல் வலுவடையுது தெரியுங்களா? இப்பவே. மகாராஷ்டிரத்திலே கடைகளைத் திறந்தாச்சி.
மு. க. க:– பம்பாய் பக்கத்திலேயா—அங்கே காங்கிரஸ் ஆட்சி இல்லையா...
மண்டலம்:– காங்கிரஸ் ஆட்சிதான் அங்கே நடப்பது, காங்கிரஸ் கட்சியே சொல்லிவிட்டுது மதுவிலக்குச் சட்டத்தைத் தளர்த்த வேண்டியதுதான் என்று. காங்கிரஸ் கட்சி சொல்வதைக் காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றுது, அதுதானே நியாயம்...
மு.க. க:– பம்பாய் பக்கத்திலே மதுவிலக்கு சட்டத்தை மாற்றிவிடச்சொல்லி அங்கே இருக்கிற காங்கிரஸ் சொல்லி இருக்குதா! பலே! பலே! துணிச்சல் பாருங்க அப்படி இருக்குது அங்கே. இங்கே தொடை நடுக்கம் எடுக்குது காங்கிக்கிலே உள்ளவங்களுக்கு பஞ்ச-