103
மு. க. க:– கள்ளுக் கடையைத் திறக்கச் சொல்லிக் கள்ளுக்கடைக்காரன் சொல்கிறான் என்று கேலி பேசமாட்டாங்களா...?
மண்டலம்:– எப்படிப் பேசுவாங்க! நீங்க காங்கிரசுக்கு வெளியே இருந்துகொண்டு பேசினா, கண்டனம், கேலி, எதிர்ப்பு எல்லாம் கிளம்பும். நீங்களே காங்கிரசிலே சேர்ந்துவிட்டா! ஒரு பய நாக்கை வளைக்க முடியுமா! காங்கிரஸ்காரர்தான் அவரும் என்று நாங்க பேசமாட்டமா, உங்க பக்கம் ஆதரவு காட்டி.......
மு.க.க:– நினைக்க நினைக்க இனிக்குதப்பா......
மண்டலம்:– அதனாலேதான் சொல்றேன். இந்தத் தேர்தலிலே காங்கிரசுக்கு ஆதரவு காட்டி, வேலை செய்து காங்கிரசுக்கு வெற்றி தேடிக் கொடுங்க. பிறகு பாருங்களேன், நீங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருது காங்கிரசு......
மு. க. க:– கள்ளுக்கடை நடத்தின ஆசாமி இப்பக் காங்கிரசிலே சேருகிறானே என்று ஊர் ஒரு மாதிரியாப் பேசாதா...
மண்டலம்:– வீணான சந்தேகம் உங்களுக்கு, உங்களைப் போன்றவங்க வேண்டியபேர் இப்பக் காங்கிரசிலே வந்து சேர்ந்திருக்காங்க......
மு. க. க:– என்னைப்பற்றி, உங்க தலைவர்களுக்கு நல்லபடி சிபார்சு சொல்லி வைக்கணும்...
மண்டலம்:– பாருங்க என்னோட வேலையை, போகப் போகப் புரியும். உங்க மனசோட போட்டு வையுங்க, இந்தத் தேர்தலிலே காங்கிரசுக்கு வெற்றி ஏற்படும்படி வேலை செய்து காட்டுங்க, உங்களையே இந்தப் பக்கத்துக்குக் காங்கிரஸ் தலைவராக்கிக் காட்டுகிறேன்...
மு. க. க:– நமக்கு எதுக்கப்பா தலைவர் வேலை...
மண்டலம்:– நம்மாலே முடியாதுன்னு பார்க்கிறிங்களா...
மு. க. க:– செச்சே! அப்படி நினைப்பேனா. எனக்குப் பலபேர் சொல்லியிருக்கிறாங்களே உன்னைப் பற்றி,