104
உன் யோசனைப்படியே நடக்கறேன், சரிதானே. என் ஓட்டு உன்னோட காங்கிரசுக்குத்தான், திருப்திதானே...
மண்டலம்:– அதென்னங்க, உன்னோட காங்கிரசு என்று சொல்றிங்க. நம்மோட காங்கிரசு என்று சொல்லுங்க...
மு. க. க:– நான் இன்னும் கதர்கூடப் போடவில்லையேப்பா...
மண்டலம்:– அதனாலே என்ன! உடையிலே என்ன இருக்குது! எல்லாம் உள்ளத்திலே இருக்கணும்; இருக்குது,
மு. க. க:– ஏம்பா! உன் பேச்சைக் கேட்டு, காங்கிரசிலே சேர்ந்துவிடறேன். கட்டாயம் நாம் ஜெயித்தாகணும்; இல்லையானா ஊர் கேலி பேசும்,
மண்டலம்:– வெற்றியிலே இனி என்னங்க சந்தேகம். நீங்களே இனி காங்கிரஸ். வெற்றி பெற்றுக் காட்டாமலா இருப்பிங்க... இந்தப் பக்கத்து ஓட்டு மூணு ஆயிரம்...
மு. க. க:– ஆமாம்; நம்ம பேச்சுக்குக் கட்டுப்பட்டவங்க ஒரு ஆயிரம் இருக்கும், எவ்வளவு குறைச்சி மதிப்புப் போட்டாலும்.
மண்டலம்:– மற்ற இரண்டு மட்டும் என்ன! உங்களை மீறியா போய்விடும்...
மு.க.க:– எதிரி கால் அரைன்னு ஆசை காட்டினா. அதுக பல்லை இளிச்சிவிடுமேன்னு பார்க்கறேன்,
மண்டலம்:– நீங்க இருக்கிற பக்கம், ஒருவன் வந்து கால் அரைன்னு பேரம் பேசுவானா, அவ்வளவு துணிச்சலா! ரோஷம் கிளம்பிவிட்டா, ஓட்டுக்கு இரண்டு மூணுகூட எடுத்து வீசுவீங்கன்னு தெரியாதா எதிரிக்கு...
மு. க. க:– ரோஷத்தைப் பார்த்தா, செலவு அதிகமாக ஆகிவிடுமே...
மண்டலம்:– அந்தப்பயம் எதிரிக்கு இருக்குமேல்லோ.... அவன் என்ன உங்களைவிடப் பெரிய புள்ளியா,