105
மு. க. க:– புள்ளியாவது சுள்ளியாவது; இப்பத்தான் கொஞ்சம் பசை! வரட்டும்பய, பார்த்துக் கொள்ளலாம்...
மண்டலம்:– அப்ப, நான் வரட்டுங்களா! இனி இந்த வண்டிப்பேட்டை பக்கம், என்னுடையது அல்ல, உங்களுடையது...
மு. க. க:– நீ போய், மற்ற இடத்தைக் கவனி தம்பி! வண்டிப்பேட்டை ஓட்டு, இப்பவே நம்ம பெட்டியிலேன்னு வைத்துக்கொள்ளு.
மண்டலம்:– அதிலே சந்தேகம் என்ன! ஒரு ஐம்பது எடுங்க...
மு. க. க:– ஐம்பது ரூபாயா...ஏம்பா!
மண்டலம்:– ஆமாங்க! ஒரு செட்டு கதர் உடை அனுப்பி வைக்கிறேன்...
மு. க. க:– ஆமாம்பா! அப்படியே கொடிகூட...
மண்டலம்:– பட்டுத் துணியிலே உங்க மாளிகைக்கு...மற்ற இடத்துக்கு, துணியிலே சரிதானே,
மு. க. க:– உனக்கா தெரியாது.
★
ஆலை அதிபர் ஆரிமுத்து:– மந்திரி வருகிறார் என்று சொன்னா, நாங்க என்ன மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்னு நினைப்பா, நாங்கள் விவரம் தெரியாதவர்கள் அல்ல. மந்திரி வரட்டும் மகராஜனாக. உனக்குச் சொன்ன பதில்தான் அவருக்கும். தேர்தல் செலவுக்கென்று எங்களைக் கசக்கிப் பிழிந்தால், நாங்கள் என்ன கதியாவது. நாங்கள் என்ன முன்பு போலவா இருக்கிறோம். எங்களைத் தான் வரி போட்டுப் போட்டு வாட்டி எடுக்கிறதே உங்க கட்சி சர்க்கார்...
மண்டலம்:– நான், முன்பே இதைச் சொன்னேன். டி. டி. கே. க்குத் தந்திகூடக் கொடுத்தேன்...
ஆலை:– உடனே வரியைக் குறைத்துவிட்டாராக்கும். விடப்பா அந்தப் பேச்செல்லாம். முன்பு போல