உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

எங்களுக்கு இலாபம் கிடையாது. ஏதோ ஒரு ஆயிரம் தொழிலாளிகள் பிழைக்கவேண்டுமே என்பதற்காக இதைக் கட்டிக்கொண்டு அழவேண்டி இருக்கிறது. வருவதிலே ரூபாய்க்கு 14 அணா கொட்டிக் கொடுக்கணுமாம், அதற்குப் பெயர் சமதர்மமாம்... சோஷியலிசமாம்...இதற்கு நாங்களே பணம் செலவழித்துக் காங்கிரசை ஆளச்சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டுமாம். குழியை வெட்ட வேண்டியது நாங்கள்—எங்களை அதிலே போட்டு மூடி மண்ணைப் போடுவீர்கள் நீங்கள். எதற்காகப்பா, வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறீர்கள். சோஷியலிசம் பேசுகிற கட்சி, முதலாளிகளிடம் வரலாமா. பணம் திரட்ட...

மண்:– கோபம் அதிகமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்போதுகூட, உங்களுக்கு வரிச்சலுகை செய்தது காங்கிரஸ் அரசாங்கம் தானே...

ஆலை:– அதற்குப் பெயர் சலுகையா...வரம்னு சொல்லப்பா! உனக்கு என்ன தெரியும் பொருளாதார சாஸ்திரம். உங்களோட காங்கிரஸ் சர்க்காரின் கண்மூடித்தனமான போக்கினால், தொழில் அமைக்க மூலதனம் கிடைப்பதில்லை. தெரியுமா! மூலதனம் எங்கே இருந்து வரும்? அந்தரத்திலிருந்தா? இலாபம் கிடைக்கவேண்டும்; அந்த இலாபத்திலிருந்து தானே மூலதனம் கிடைக்க முடியும்...

மண்:– அதைக் காங்கிரஸ் சர்க்கார் ஒப்புக்கொள்கிறதே! ஒப்புக்கொள்வது மட்டுமா! கம்யூனிஸ்டுகளின் வாயை அடக்க இந்த வாதத்தைத்தானே பயன்படுத்துகிறது.

ஆலை:– பேசுவது சோஷியலிசம்; தேர்தல் நிதிக்கு, முதலாளிகள்!

மண்:– காங்கிரஸ் சொல்லும் சோஷியலிசத்தில், முதலாளிகளுக்கும் இடம் உண்டு. அதுதானே அதிலே இருக்கிற அருமையே. மற்ற நாடுகளில் சோஷியலிசம் என்றால் முதலாளிகள் இருக்கக்கூடாது என்பது திட்டம். இங்கே அப்படியா!! முதலாளிகள் கட்டாயம் இருப்பார்கள், இருந்தாக வேண்டும்