107
என்று திட்டவட்டமாகப் பேசுவது காங்கிரஸ் கட்சி. அதை மறந்துவிடலாமா?
ஆலை:– முதலாளி இருக்கலாம், ஆனால், அவனிடம் இலாபம் சேரக்கூடாது, அதற்கு ஆயிரத்தெட்டுத் தடைகள், விதிகள், சட்டங்கள். ஏன் இதைச் செய்து கொண்டு எங்களிடம் பணமும் கேட்கிறீர்கள்? எதற்காகக் கொடுக்கவேண்டும்? எங்கிருந்து கொடுக்க முடியும்?
மண்:– இப்படிப் பேசினால் நான் என்னத்தைச் சொல்ல முடியும். பணம் தேவை, பெரிய அளவில். காங்கிரசு முதலாளிகளை வாழவைக்கிறது என்று பலமான பிரசாரம்; எதிர்ப்பு அதிகம். காங்கிரஸ் தேர்தலில் தோற்றுப்போனால், பிறகு சோஷியலிசத் திட்டப்படி தொழில்களைத் தனிப்பட்ட முதலாளிகளிடம் இருக்கவிட மாட்டார்கள்......
ஆலை:– அந்த இழவுக்காகத்தான் எங்களால் ஆன உதவி செய்து தொலைக்கிறோம் காங்கிரசுக்கு. போனதடவை ஒரு கோடி ரூபாய் அளவுக்குக் கொடுத்திருக்கிறோம்.
மண்:– கொடுத்ததைக் கவனத்தில் வைத்துக்கொண்டுதான், காங்கிரஸ் சர்க்கார் உங்களுக்கு உள்நாட்டுக் கடன், வெளி நாட்டுக்கடன், சலுகை எல்லாம் கிடைக்கும்படி செய்தது...
ஆலை:– செய்ததோ இல்லையோ, அதுகூட இருக்கட்டும் ஒருபுறம். எங்களிடம் பணமும் வாங்கிக்கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் மேடைமீது ஏறிக்கொண்டு, உற்பத்தியான செல்வத்தை நாங்களே உறிஞ்சிக் கொண்டோம் என்றா பேசுவது, மக்களுக்கு எங்கள் பேரிலே ஆத்திரம் வருகிறபடி. அவர்கள் சொத்து சிலரிடம் குவிந்திருப்பது ஏன் என்று கேட்டுப் புரட்சியை செய்யமாட்டார்களா!
மண்:– விடுவோமா! இருக்கிற சொத்தையும் வருவாயையும் பங்கு போட்டுக்கொள்வது சோஷியலிசம் அல்ல என்று பேசி வருவது எந்தக் கட்சி? காங்கிரசல்லவா! சோஷியலிசத்துக்கே நாங்கள் புதிய வியாக்யானம் கொடுத்திருக்கிறோம்.