51
இது புரியவில்லை என்றால், நமக்கு என்னவோ போல இருக்கும். சுளை முக்கியமா தோல் முக்கியமா என்பது கூடத் தெரியாதா; வயது எட்டு இருக்கும் போலிருக்கிறதே என்று எண்ணிக் கொள்வோம்; ஏக்கம் கொள்வோம்.
பெரியவர்கள், பெரிய இடத்தில் உள்ளவர்கள் எத்தனை பெரிய செயலையும் எளிதாகச் செய்திடும் வாய்ப்புப் பெற்றவர்கள், சுளையை எறிந்துவிட்டு, தோலைத் தூக்கிவைத்துக்கொண்டு விளையாடினால் நான் என்ன சொல்லமுடியும்! பரிதாபப்படலாம்!!
முதலமைச்சர் பக்தவத்சலனார் சுளையை விட்டுவிட்டுத் தோலை ஆவலுடன் எடுத்துக்கொள்ளும் விவரமறியாத விளையாட்டுப் பிள்ளையல்ல; வயதில் பெரியவர்; சொல் அதன் பொருள், பொருள் அதன் பொருத்தம், இடம் காலம் என்ற இவைகளை அறிந்திடும் பக்குவம் பெற்றவர்; என்றாலும், என் பேச்சிலே அவருக்குத் தோல்தான் பிடிக்கிறது. சுளையைச் சுவைத்திட மனம் இல்லை என்றால் நான் என்ன செய்யலாம்! இவ்வளவு பெரியவரும் இப்படித்தானா என்று எண்ணி ஏங்க வேண்டும்! வேறென்ன செய்யமுடியும்! அவருடைய இயல்பையா மாற்ற முடியும்? நானா? ஏ! அப்பா! நம்மாலே முடிகிற காரியமா! நாடே முயன்று பார்த்து, முடியவில்லையே என்று முணுமுணுக்கிறதே! நான் எம்மாத்திரம்!!
சாக்கடையை அகற்றிவிட்டு அந்த இடத்தைப் பூக்கடை ஆக்கிக் காட்டு, நான் உனக்கு அடிமை ஆகிறேன் என்று சொன்ன சொல்லைக் கேட்டு, சாக்கடையைச் சுத்தப்படுத்த முனையாமல், தெருத் தெருவாகச் சுற்றி, தெரியுமா! தெரியுமா! எனக்கு அவன் அடிமை ஆகிவிட ஒத்துக்கொண்டான்! என்று அந்த ஆசாமி பேசினால், ஊர் என்ன சொல்லும்? நேற்றுவரை நன்றாகத்தானே இருந்தான்; இன்று என்ன ஏதேதோ பேசுகிறானே என்று கூறும்.
ஆனால், நாடாளும் நல்ல நிலையில் உள்ள முதலமைச்சர் பக்தவத்சலம், சாக்கடையைப் போக்கிப் பூக்கடை வைத்திடு என்ற நிபந்தனையைக் கூறாமல், அடிமை ஆகிவிடுவதாகச் சொன்னான் என்ற அபத்தத்தைச் சுமந்து திரிவதுபோல, என் பேச்சிலே இணைந்துள்ள