உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

இன்னும் சிலர், உண்மையைக் கூறியாக வேண்டும் என்ற துடிப்பும் கொள்கின்றனர்; கூறிடின் கேடடைவோமோ என்ற அச்சமும் கொள்கின்றனர். அதன் காரணமாக, உள்ள குறைகளை, ‘இலை மறை காய்’ என்ற முறையிலே எடுத்துக் காட்டியுள்ளனர்.

தம்பி! பிரிட்டனை ஆண்டுவந்த இரண்டாவது சார்லஸ் என்ற மன்னன், தன்னைப் பெரிய கவிஞன் என்று எண்ணிக்கொண்டான்! ஏதேதோ கிறுக்கித் தள்ளியபடி இருந்தான் — கவிதைகள் என்ற நினைப்பில். கருத்தில்லை, கற்பனைத் திறம் இல்லை, இலக்கணம் இல்லை. எழில் இல்லை—ஆயினும் குப்பை வார்த்தைக் கோவை என்று கூறிடலாமா? மன்னன் எழுதியது!!

மன்னன் அத்துடன் இல்லை. அரச அவையின் மதிப்பு மிக்க கவிஞனை அழைத்து எமது கவிதையினைப் பற்றிய உமது கருத்தைக் கூறிடுவீர் என்றான். என்றானா? கட்டளை பிறப்பித்தான!

கவிஞன் பார்க்கின்றான், கடுங்கோபம் கொள்கின்றான், வெறும் குப்பையைக் கவி என்று கூறியது பற்றி. என் செய்வான்? கவி உள்ளம் சொல்கிறது, இஃது கவிதை அல்ல என்று சொல்லிவிடு என்று. மன்னன் எழுதியதாயிற்றே என்ற நினைவு குதித்தெழுந்து கூறுகிறது, நாடாளும் மன்னன் எழுதியது! ஏடு தூக்கிடுவோனே! இஃது நற்கவிதையே என்று கூறிடு! இல்லையேல், மன்னன் ஏற்றம் உன்னைத் தாக்கிடும் என்று. கூறுவாயோ அங்ஙனம்! கூறிடின் குவலயம் உன்னை என்னசொல்லும்? நற்கவிதை எது என்று அறியாத நீயோ கவிஞன்? உனக்கோ நீள் புகழ்? என்று கேலி பேசும். இப்போது மட்டுமா இழுக்கு? வழிவழி வருவோர் உன் கல்லறைமீது காறித்துப்புவர் என்று அவனுடைய கவிதை உள்ளம் கூறுகிறது. என் செய்வான்! திகைத்தான், திணறினான், திடுக்கிட்டுப் போனான்! நெடு நேரத்திற்குப் பிறகு ஒரு யோசனை பிறந்தது.

“அரசே!” என்றான்; “அரசே! தாங்கள் சகலவல்லமையும் பொருந்தியவர்! தங்களால் ஆகாததும் ஒன்று உண்டா! எதனையும் செய்து முடித்திடும் ஆற்றல படைத்தவர் தாங்கள்! என்ன காரணத்தாலோ, மிகமிக மட்டமான முறையிலே கவிதை எழுதிக்காட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டீர்கள். தங்களின் பேராற்றலையும்,