இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காஞ்சிக் கடிதம்: 84
நரி பரியான கதை!
★ அமெரிக்க ஆதிக்கத்தை ஆதி நாளிலேயே கண்டித்தவன் நான்!
★ ஆலும் வேலும் பிளக்கப் பயன்படும் கோடரி வாழைக்குப்
பயன்படுவதில்லை!
★ கிளிப் பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்துவிட்டது!
★ ‘கேட்டால் கேள்! விட்டால் விடு!’ என்பதல்ல நமது முறை!
★ ‘துக்க தினம்’ என்ற பெரியார் காங்கிரசுக்கு வேண்டியவர்!
★ ‘விழா நாள்’ என்ற நான் காங்கிரசால் கண்டிக்கப்படுபவன்!
★ வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது!
★ மரக்கட்டைகளாக இருத்தலல்ல மாந்தர்க்கழகு!
★ ஜனநாயக சோஷியலிசம் பாறை மீது தூவிய விதை
★ காமராஜர் முதலாளி நரிகளைச் சோஷியலிசப் பரிகளாக்கிக் காட்ட
முனைகிறார்!