உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தைக் கெம்பீரம் என்றும் கூறிப் பாராட்டுவோர் இருப்பதனைக் காண்கின்றாய்.

இந்தி ஆதிக்கப் பிரச்சினை பற்றித் தமிழக ஏடுகள் காட்டிய ஆர்வமும், தொடுத்த கண்டனமும் கொஞ்சம் அல்ல.

இன்று வரையில் இந்த இதழ்கள் கேட்டுக் கொண்ட அளவிலேகூட ஆட்சி மொழிச் சட்டம் திருத்தப்படவில்லை.

என்ன செய்கின்றன இந்த இதழ்கள்?
அதனையும் எழுதுகின்றன!
எழுதிவிட்டு?
எழுதுகின்றன!
அவ்வளவுதான்!!

ஜனநாயகம் வலிவு பெறவேண்டுமானால் என்ன செய்திருக்க வேண்டும்? தட்டாமல் தயங்காமல் இந்த இதழ்கள், மக்களிடம் கூறவேண்டும், இந்தத் தேர்தலில், காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள்! இந்தி ஆதிக்க நோக்கத்துடனேயே இந்த ஆட்சி இருந்து வருகிறது. எமது வேண்டுகோட்களுக்கு எள்ளளவு மதிப்பும் தரவில்லை. இது அரசியல் அகம்பாவம். இந்த அகம்பாவம், சர்வாதிகாரத்திற்குத்தான் நாட்டை இழுத்துச் செல்லும். ஆகவே, நாட்டினரே! இந்த காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று எழுத வேண்டும்.

எழுதுகின்றனவா?
இல்லை! ஏன்?

அவை, அக்கிரமத்தை ஒழித்தாக வேண்டும் என்பதற்காக அமைந்துள்ள படைக்கலன்கள் அல்ல! வண்ணம், வடிவம் பாரீர்! என்று கூறிடும், ஏடுகள்!!

எனவேதான் தம்பி! நான் மிக அதிகமாகவே வலியுறுத்திக் கொண்டு வருகிறேன், நல்லாட்சி காணவேண்டும் என்பதிலே நாட்டம் உள்ளோர், அந்த நோக்கத்துக்காகவே ஆக்கப்பட்டுள்ள படைக்கலன் போன்ற கழக ஏடுகளைப் பெரிய அளவில் ஆதரிக்க வேண்டும் என்பதனை.