உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

இந்த நாட்டை ஆள்வது யார்? இராமசாமிப் பெரியாரா? நானா?—என்று ஆச்சாரியார் ஆத்திரத்துடன் கேட்க வேண்டிய அளவுக்கு வீரமான ஆறப்போர் நடத்திய பெரியாருக்கு, ஆச்சாரியார் இந்தியால் விளையும் கேடுபற்றி விளக்கவேண்டிய அவசியம், என்ன வந்தது?

தமிழ் மொழியின் தொன்மைபற்றி டாக்டர் மு. வ. வுக்கும், பேராசிரியர் சேதுப்பிள்ளைக்கும் இவர் எடுத்துச்சொல்வதா!

ஏதோ, அவர் விளக்கம் அளித்தார்—கேட்டுக்கொண்டோம், இந்த நிலைக்கு அவர் வந்து சேர்ந்தாரே என்ற மகிழ்ச்சியுடன்.

அதற்குப் பிறகு; அவர் வந்து சேர்ந்தாரே என்ற மகிழ்ச்சியுடன்.

அதற்குப் பிறகு; அவர் செய்தது என்ன?

கட்டுரை எழுதுகிறார்—அழகான கட்டுரைதான்—ஆணித்திறமான வாதங்கள் காண்கிறோம்—இது மேதாவித்தனம்; இல்லை என்பார் இல்லை! ஆனால் இது போதாதே!

நயாபைசா அல்லவா நடமாடுகிறது!!

ஆச்சாரியார், இந்தப் போக்கைக் கைவிட்டாக வேண்டும் என்று, நேரு பெருமகனாருக்கு, இறுதி எச்சரிக்கை ஏன்விடக் கூடாது? ஏன் தமது ஒப்பற்ற நண்பர் பெரியாரிடம் கலந்துபேசி, இந்தி ஆதிக்க ஒழிப்புக்கான அறப்போர் தீட்டி நடத்தக் கூடாது? செய்கிறாரா? இல்லை! செய்வாரா? அவரா! கனவிலே கூட அப்படி ஒரு காட்சியைக் காண முடியாது.

ஆனால், பேசுகிறார், எழுதுகிறார், இந்தி ஆதிக்கம் ஆபத்தானது, அக்ரமம், அநீதி என்று! அந்தப் போக்கை எதிர்த்து ஒழித்தாக வேண்டும் என்று எக்காளமிடுகிறார், ஆனால் எதிர்ப்பு நடத்த மறுக்கிறார்.

அனுமந்தய்யாவும், சுப்ரமணியனாரும், குமாரசாமிராஜாவும் வேறு பலரும், எப்படியோ, அப்படியேதான் ஆச்சாரியாரும் இருக்கிறார் இவர்கள் யாவரும் வடநாடு, மெள்ள மெள்ள தன் ஆதிக்கப் பிடியைப் பலப்படுத்திக்கொண்டு வருவதை உணருகிறார்கள். ஓரோர் சமயம் வெளியிலே கொட்டியும் காட்டுகிறார்கள். ஆனால், துணிந்தும் தொடர்ந்தும் பணியாற்றி, வடநாட்டு ஆதிக்கத்தை ஒழித்-