150
முடிகிறதோ இல்லையோ, மூலைக்குச் செல்கிறோமோ, காலத்தின் துணைபெற்று வெல்லுகிறோமோ, அது வேறு பிரச்சினை—அது குறித்துக் கவலையற்று, தேர்தலில் ‘போட்டியிடவே முடிவு செய்திருக்கிறோம். எனவே, கரமராஜருக்கு, சென்றேன், கண்டேன், வென்றேன், என்று கூறுவதற்கான வாய்ப்பும் பாழாகிவிட்டதே என்பதனால், கோபம் கொப்பளிக்கக் காரணம் இருக்கிறது - சுடு மொழி பேசுகிறார். பேசட்டும். பெரியார்மீது, இழிமொழி வீசக் காரணம் இருக்கிறதா! செய்நன்றி மறப்பவர்பற்றி வள்ளுவர் கூறியதைக் காமராஜருக்குக் கவனப்படுத்தும் ராஜவேலர்கள்கூடக் கிடைத்திருக்கிறார்களே! நான் எந்த நன்றியையும் கொல்வேன் என்று துணிந்து கூறுபவர் போலல்லவா, காமராஜர் பெரியார்மீதே கேலி வீசுகிறார்.’
திராவிடர் கழகத்தின் வளர்ச்சியே பாழாவதானாலும் கவலையில்லை, நான் காமராஜரை ஆதரித்தே தீருவேன் என்று பெரியார் பேரார்வம் காட்டி வருகிறார். அவருக்குக் காமராஜர் காட்டும் மரியாதை, நன்றி, என்னவிதமாக இருக்கிறது?
ஆச்சாரியார்மீது காமராஜருக்குக் கோபம் வந்தது. ஆச்சாரியார், காங்கிரசில் சர்வாதிகாரப் போக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது, சீரழிவு ஏற்பட்டுவிட்டது என்று பேசுவது மறைமுகமாகத் தன்னைக் கண்டிப்பது என்று காமராஜர் கருதுகிறார், அதற்காக ஆச்சாரியாரைக் கண்டிக்கக் கிளம்புகிறார்.
நாம் கண்டிக்கக் நேரிடும்போது, என்ன சொல்கிறோம்,
குல்லூகபட்டர்
சாணக்கியர்
வர்ணாஸ்ரமி
சனாதன வெறியர்
என்று பல கூறுவோம். தம்பி! நினைவில் வைத்துக்கொள்.
ஒரு குழந்தையைக் கொஞ்சுகிறோம்—செல்லப் பெயரிட்டு அழைத்துக் கொஞ்சுகிறோம், என்னென்ன சொல்கிறோம்,
வாடா என் குரங்கே!
கிட்டே வாடா கோட்டானே!என்று சொல்வோமா!