151
தங்கக் கட்டியே
வைர மணியே
வண்ண நிலாவே
பேசும் ரோஜாவே
என்று ஏதேதோ பேசுகிறோம். அதுபோலவே, கண்டிக்கும்போது, பயன்படுத்தப்படும் சொற்களையும், நினைவிலே கொண்டு, வா.
தம்பி! இனிக்கேள், இந்த வேதனை தரும் விஷயத்தை.
ஆச்சாரியாரைக் கண்டிக்கக் காமராஜர் கிளம்பினார்; என்ன கூறிக் கண்டித்தார், தெரியுமா?
என்று கண்டிருக்கிறார். எல்லா இதழ்களிலும், வெளியிட்டனர்; ஒன்றுக்கேனும் காமராஜர் மறுப்பு அளிக்கவில்லை.
பெரியார் பற்றிக் காமராஜரின் எண்ணம் எப்படி இருக்கிறது என்பது தெரிகிறதல்லவா!
எவ்வளவு ஏளனம் தொனிக்கிறது, அந்த ஏசலில் என்பதைப் பார்த்துவிட்டு, பெரியார் எத்துணை மும்முரமாக இந்தக் காமராஜருக்கு ஆதரவு திரட்டுகிறார் என்பதையும் பார்க்கும்போது, எனக்கு வேதனையாக இருக்கிறது, முன்னேற்றக் கழகத்தின்மீது இருக்கும் கோபம் காரணமாகக் கருத்துக் குழம்பியுள்ள தோழர்களுக்குத் தவிர, மற்ற தி. க. வட்டாரம், உள்ளபடி வேதனையும் வெட்கமும் அடையத்தான் செய்கிறது.
பெரியார் என்பதற்குக் காமராஜர் கொள்ளும் பொருள், கெட்டுவிட்ட ஆச்சாரியார்! நியாயந்தானா! சகித்துக்கொள்ள முடிகிறதா! என்று கேட்கத் தோன்றுகிறது. எனக்குத்தான் அந்த வாய்ப்பும் உரிமையும் இல்லையே, நான் என்ன செய்வது! யாருக்கேனும் இருக்கக்கூடும், அவர்களேனும், கேட்கட்டும்.
ஆச்சாரியார் தரம் கெட்டநிலையில் இருக்கிறார்—இதை விளக்கக் காமராஜர் கூறுவது, பெரியார் அளவுக்கு இறங்கிவிட்டாரே, என்பது.