152
இன்னும் வெளிப்படையாகவே பேசத் துணிந்து காமராஜர், தஞ்சையில் சென்ற கிழமை பேசும்போது சொல்கிறார்.
இந்தக் கேலி மொழியா, கருப்பஞ்சாறாக இனிக்கிறது, என் அருமை தி. க. தோழர்களுக்கு! நண்பர்களே! நீங்கள் வலிய வலியச் சென்று வழங்கும் ஆதரவு, காட்டும் பரிவு, சொரியும் அன்பு, மொழியும் பாசம், படைத்திடும் நேசம், என்னவிதமான மனப்போக்கைக் காமராஜருக்கு ஊட்டிவிட்டது, பாருங்கள்! என்மீது உங்களுக்கு நிரம்பக் கோபம் இருக்கிறது, நான் அதனை உணருகிறேன், உள்ளம் வருந்தாத நாள் இல்லை—ஆனால் அதன் காரணமாக, காமராஜரிடமிருந்து இத்துணை இழிமொழிகளைக் கேட்டுக்கொள்ள வேண்டுமா!! எண்ணிப் பாருங்கள்.
ஏதோ நான் தமிழருக்குப் பாடுபடுபவன் என்பதால், பெரியார் என்னை ஆதரிக்கிறார் என்று காமராஜர் பேசியிருக்கக்கூடாதா! பெருந்தன்மை தெரிந்திருக்குமே! கேட்க, இனிக்குமே! அவர்களுக்குத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பது தெரியும்—அதனால் என்னை ஆதரிக்கிறார்கள் என்றல்லவா ஏசுகிறார்.
மருதப்பன், மாப்பிள்ளைத் தோழனாக இருப்பது ஏன் தெரியுமா? இந்த மணப் பெண் மருதப்பனைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறிவிட்டாள்—எனவே, மருதப்பன், எனக்கு, மாப்பிள்ளைத் தோழனானான்.இப்படிக் கலியாண வீட்டிலே பேசினால், போலீஸ் வந்து, கலகத்தை அடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்—நாட்டிலே காமராஜர் இதனைப் பதட்டத்துடன் பேசி வருகிறார்—நண்பர்களே! நீங்களோ, நெறித்த புருவத்தினராகிறீர்கள், என்னைக் காணும்போது!!
யார் அழைத்தார்கள்?
தானாக வந்தார்கள்!