153
வேறு வழி என்ன இருக்கிறது?
வேறு வேலை என்ன இருந்தது?
சும்மாவா, வந்தார்கள்!
என்று, இந்த ஏச்சு, மளமளவென்று வளரும்—ஒருநாள் உட்கார்ந்து இதற்காக உளம் வருந்த நேரிடும்.
மூவர் முரசு அறைந்ததில், என்னைப் பொறுத்தமட்டில், இந்தப் புதிய கட்டத்தில் காமராஜர் காலடி எடுத்து வைப்பது தெரிகிறது.
என்று, காமராஜர் எண்ணிக்கொள்வதாகத் தெரிகிறது.
தம்பி! உள்ளபடியே, காமராஜரின் இந்த இரு தாக்குதலையும் எடுத்துக்காட்டி சில காங்கிரஸ் நண்பர்களே ஏளனம் செய்தனர்; நான் தலையைத் தொங்கவிட்டுக் கொள்ளாமல் என்ன செய்வது!
எனவேதான், இத்தாலி நாட்டிலே இரு வெறியர்கள் பல சிறார்களைச் சித்திரவதை செய்யக் கிளம்பியபோது, வீரமாகப் போரிட்ட வனிதைபற்றிப் படித்தபோது, எனக்கு, இங்குள்ள அரசியல் சூழ்நிலையும், அதிலே நாம் மேற்கொண்டுள்ள பணியும், நினைவிலே வந்தது. உன்னிடம் சொன்னேன்; வேறு யார் தம்பி, இருக்கிறார்கள் நான் கூறுவதைக் கேட்க!
11—11—’56
அன்பன்,
அண்ணாதுரை
அ.க. 4 — 10