161
மிஞ்சும் விதத்தில் செலவு! ஒரு கமிட்டியின் கருத்துக்கு நேர்மாறாக மற்றோர் கமிட்டியின் கருத்து! இந்தவிதமான ஆட்சியைச் செய்துகொண்டு, பணத்தைப் பாழாக்கி வருகிறவர்கள்தான், பாட்டாளிகளுக்கு சிக்கனமாக வாழ்க்கை நடத்துங்கள்! வீண்செலவு செய்யாதீர்கள்! என்று உபதேசம் செய்கிறார்கள். இந்த அபாரமான கண்டுபிடிப்புக்காகக் கல்கத்தாவில் கூடினர்! நாடெங்கும் கொட்டமடித்துக்கிடக்கும் எந்தக் காட்டரசனுக்கும் தெரியுமே இந்த உபதேசம்.
பொதுப்படையாகப் பேசுவது போதாது—சுட்டிக்காட்டியாவது இவர்களைத் திருத்தவேண்டும் என்றுகூடத் தினமணிக்குத் தோன்றி இருக்கிறது. எனவே, துரைத்தனம், எப்படியெப்படி தண்டச் செலவு செய்கிறது என்பதைப் படம்பிடித்துக்காட்டவே முற்பட்டிருக்கிறது.
இவ்வளவு பச்சையாக எடுத்துக் காட்டியாவது, திருத்தலாம் என்று தினமணி கருதுகிறது.
அமைச்சர்களுக்குக்கூடச் சிறிதளவு கோபம் உண்டாகும். திண்ணைப் பள்ளிக்கூடத் திறப்பு விழாவும், ஓடைப்பால அமைப்பு விழாவுக்கும் நாம் சென்று வீண் செலவிடுகிறோம் என்று தினமணியே கேலிசெய்கிறதே என்று வருத்தமாக இருக்கும். ஆனால் இதுபோன்ற ஒவ்வோர் விழாவையும், மக்கள் காண நேரிடும்போது எத்துணை வேதனை அடைகிறார்கள் என்பதை இந்த அமைச்சர்கள் உணர்ந்தால்தானே! எத்தனை எத்தனை வீண் விழாக்கள்! தண்டச் செலவுகள்! எத்தனை கால்கோள் விழாக்கள்! கட்டடம் என்றென்றும் எழுப்பப் போவதில்லை என்பது, ஊராருக்கும் தெரியும், இவர்களும் அறிவார்கள், எனினும் அதற்கும் ஓர் விழா! மக்களைக் காணவும், மக்கள் முன்பு தமக்குக் கிடைத்துள்ள புதிய மதிப்பைக் காட்டிக்கொள்ளவும், மாவட்டகலெக்டர் முதற்கொண்டு, தமது ஏவலர்களாகக் கைகட்டி வாய்பொத்தி நிற்பதைக்காட்டவுமன்றே இந்த விழாக்கள் நடக்கின்றன. வீண் விழாக்கள்! தண்டச் செலவு! என்று கண்டிக்கும் இதே தினமணிகள், இந்த விழாக்களின் கோலத்தை விளக்கத் தனி